Advertisment

என்டர்டெயின்மென்ட் கியாரண்டி: பிரின்ஸ் விமர்சனம்

Prince movie review | ரஜினிக்கு குருசிஷ்யன், கமலுக்கு மைக்கேல் மதன காமராஜன் போன்ற முழுநீள நகைச்சுவை படமாக சிவகார்த்திகேயனுக்கு ப்ரின்ஸ் நிச்சயம் இருக்கும்..

author-image
WebDesk
New Update
Prince movie review

Prince movie review

Sivakarthikeyan | டாக்டர், டான் போன்ற வசூல் சாதனை படங்களுக்குப் பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் தயாரிக்கப்பட்ட படம் பிரின்ஸ்.

Advertisment

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் பட பாணியில், முழுநீள நகைச்சுவை படத்தை எந்தவித சென்டிமென்ட் ஆக்க்ஷன்களையும் திணிக்காமல் என்டர்டெய்ன்மென்ட் ஒன்லி மை டார்கெட் என்கிற ஒரே கான்செப்ட்டில் கொடுத்துள்ளனர்.

படத்தின் கதாநாயகியாக உக்ரைன் நாட்டை சார்ந்த மரியா ரியாபோஷ்ப்கா  நடித்திருக்கிறார். தந்தையாக சத்யராஜ், வில்லன் கதாபாத்திரத்தில் பிரேம்ஜியும், சிறப்பு தோற்றத்தில் சூரியும் நடித்துள்ளனர்.

பிரிட்டனை தாய்நாடாக கொண்ட கதாநாயகியை பார்த்ததும் காதலில் விழும் கதாநாயகன், தாய்நாட்டுக்கு சென்று வாழ விரும்பும் கண்டிப்பான தந்தை சிறுவயதில் இங்கிலாந்தில் இருந்து உலகப்போரால் வெளியேறி இந்தியாவுக்கு வந்த கதாநாயகியின் பாட்டி, பிரிட்டிஷ் காலகட்டத்தில் சுதந்திரத்துக்காக போராடி உயிரிழந்த கதாநாயகனின் தாத்தா, அதனால் ஆங்கிலேயர்கள் மீது கோபமாக இருக்கும் தந்தை, கதாநாயகியின் தந்தையின் இடத்தை கபளீகரம் செய்ய விரும்பும் பிரேம்ஜி,  இந்த நிலையில் எப்படி நாயகன் நாயகி ஒன்றாக சேர்கின்றார்கள் என்கிற கதையை காமெடியாக நகர்த்தி சென்றிருக்கும் இயக்குனர் அனுதீப் முழுக்க முழுக்க கதையை சிவகார்த்திகேயனுக்காகவே எழுதியது போன்று காட்சிப்படுத்தியிருக்கின்றார்.

அமிதாப், ரஜினி ஸ்டைலில் காமெடிக்கு பொருந்திப்போகும் உடல்மொழியும் ஸ்க்ரீன் பிரெசன்ஸூம் என நாளுக்கு நாள் தன்னை செதுக்கிக் கொண்டே செல்கின்றார் சிவகார்த்திகேயன். படம் ஆரம்பம் முதல் கடைசிவரை போரடிக்காமல், ரஜினி ஃபார்முலாவில் அப்படியே இளம் ரஜினி மாதிரியே பொருந்தி போகின்றார் சிவா.

குறிப்பாக கதாநாயகி தன்னுடைய பெஸ்டி என்று இங்கிலாந்து பாய்ஃப்ரண்டை சொல்ல திருதிருவென முழிப்பதிலும், அவனுக்கு நிச்சயதார்த்தம் அதற்கு வாழ்த்து சொல்லுங்கள் என்று கதாநாயகி சொல்லும்போது body language அப்படியே மாற்றி பேசும் காட்சியில் ரஜினியே கண்முன் நிற்பதுபோல அள்ளிச்செல்கிறார் இந்த ப்ரின்ஸ். 

மரியா ரியாபோஷ்ப்காவும் தனது உணர்வுகளை சில இடங்களில் உணர்வுபூர்வமாக பொருத்தியிருப்பது சிறப்பு

ஆனால் சத்யராஜ் சதா பேசிக்கொண்டே இருப்பது வேகமாக செல்லும் திரைக்கதையை அவர் பின்னுக்கு இழுப்பது போன்ற சலிப்பு ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை. அதேபோல நண்பர்கள் உடனான சீன்களும் சிவகார்த்திகேயனின் முந்தைய படத்தின் சீன்களை இடையில் சொருகியது போலவே இருக்கிறது.

இதுபோன்ற தொய்வுகளை உடனடியாக யானையைபோல அல்லாமல் குதிரையைப்போல உடனடியாக தூக்கி நிறுத்தும் சிவாவின் திரை ஆளுமையே படத்தின் மிகப்பெரிய பலம். படத்தில் ஸ்கூல் பசங்களாக வரும் சிறுவர்களும் பர்ஃபார்மன்ஸ்ல் பின்னியிருக்கின்றனர்.

வழக்கமாக சிவகார்த்திகேயன் படத்தில் படம் வெளிவரும் முன்பே பாடல்கள் பட்டையை கிளப்பும். ஆனால் ப்ரின்சில் அதை தவறவிட்டாலும் ஸ்க்ரீனில் சஸ்டெய்னராக தூக்கி நிறுத்தி, படத்தோடு பார்க்கும் போது துள்ளி ஆட வைக்கிறது பாடல்கள்.

பின்னணி இசை இருப்பதே தெரியவில்லை. ஓளிப்பதிவு பளிச்சென பதியவைக்கிறது. எடிட்டிங் நிறைய உழைப்பை கொடுத்திருக்க வேண்டும் என்பதை பல காட்சிகள் தெரிவிக்கின்றன.

படத்தின் கதாநாயகனுக்கு இணையாக எடிட்டர் வேலை செய்துள்ளார். சண்டைக்காட்சிகளையும் ரசிக்கும்படியே படமாக்கியுள்ளனர். ஒட்டுமொத்த படத்தையும் தாங்கி நின்று ரசிக்க வைத்திருக்கின்றார் சிவகார்த்திகேயன் ரஜினிக்கு குருசிஷ்யன், கமலுக்கு மைக்கேல் மதன காமராஜன் போன்ற முழுநீள நகைச்சுவை படமாக சிவகார்த்திகேயனுக்கு ப்ரின்ஸ் நிச்சயம் இருக்கும்..

திராவிடஜீவா

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Sivakarthikeyan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment