/indian-express-tamil/media/media_files/2025/08/02/aadu-jeevitham-2025-08-02-19-39-25.jpg)
இந்திய திரைப்படத்துறையில் 71-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த பட்டியலில், ப்ரித்விராஜ் நடித்த ஆடு ஜீவிதம் படத்திற்கு எந்த விருதும் வழங்கப்படவில்லை என்பது பலருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய சினிமாவில் ஆண்டுதோறும் சிறந்த திரைப்படங்களுக்கு தேசிய விருது வழங்கப்பட்டு வருகிறது. 2022-ம் ஆண்டு வெளியான திரைப்படங்களுக்கு கடந்த ஆண்டு விருதுகள் அறிவிக்கப்பட்டது. இதில் திருச்சிற்றம்பலம் படத்திற்ககா நித்யா மேனன் சிறந்த நடிகைகான விருதை வென்றிருந்தார். அதனைத் தொடர்ந்து 2023-ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் நேற்று (ஆகஸ்ட் 1) அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பில், தமிழில் ஹரிஷ் கல்யாண், எம்.எஸ்.பாஸ்கர் நடிப்பில் வெளியான பார்கிங் திரைப்படத்தில் சிறந்த படம், சிறந்த திரைக்கதை, மற்றும் சிறந்த துணை நடிகர் (எம்.எஸ்.பாஸ்கர்) என 3 பிரிவுகளில் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு வீட்டில் கீழே இருக்கும் பார்க்கிங்கை யார் பயன்படுத்துவது என்ற ஈகோ மோதலை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டிருந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது.
#Aadujeevitham is a cinematic triumph, and Prithviraj’s Najeeb is unforgettable. Yet #Jawan bags National Awards?🤔🤔
— Bala 🎞️💰 (@BalaTradeZ) August 1, 2025
Credibility of these awards is fading fast. @PrithviOfficial deserves better!#nationalfilmaward #71stNationalFilmAwards #GoatLife pic.twitter.com/HdlvuhTR8M
அதேபோல் வாத்தி படத்திற்கு இசையமைத்த ஜி.வி.பிரகாஷ்க்கு சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதும், தெலுங்கில் பாலகிருஷ்ணா நடித்த பகவந்த் கேசரி, மலையாளத்தில், ஊர்வசி நடித்த உள்ளொழுக்கு, தி கேரளா ஸ்டோரி இந்தியில் டுவல்த் ஃபெயில், உள்ளிட்ட படங்களுக்கும் தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டது. விருது பெற்ற திரைப்படங்களுக்கு நெட்டிசன்கள் தரப்பில் பாராட்டுக்கள் குவிந்து வந்தாலும், ப்ரித்விராஜ் நடிப்பில் வெளியான ஆடு ஜீவிதம் படத்தை தேர்வுக்குழுவினர் கண்டுகொள்ளவில்லை ன்ற குற்றசாட்டும் எழுந்துள்ளது.
Don't need any award to know what you are to us Najeeb...❤️
— Sujith🧢 (@itz_sujith) August 1, 2025
You have already won our hearts and that's the biggest achievement you can ever get 💎❤️#Aadujeevitham @PrithviOfficial pic.twitter.com/q0XO7cYJMd
Real cinema doesn’t need approval from a jury that calls The Kerala Story “best directed.”
— Jeo Felix (@immmaaanueel) August 1, 2025
Aadujeevitham was pure, uncompromised filmmaking — a true cinematic masterpiece.
#Aadujeevitham is what we call Absolute cinema. #nationalaward pic.twitter.com/v0SUw2VSSR
2023-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி முதல் டிசம்பர் 31-ந் தேதி தேசிய தணிக்கை வாரியத்தால் சான்றிதழ் அளிக்கப்பட்ட திரைப்படங்களுக்கு மட்டுமே தற்போது விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ப்ரித்விராஜ் நடித்த ஆடு ஜீவிதம் திரைப்படம், 2024-ம் ஆண்டு மார்ச் மாதம் வெளியானது. ஆடு ஜீவிதம் என்ற நாவலை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்ட இந்த படத்தை பிளசி இயக்கியிருந்தார். ப்ரித்விராஜூவின் நடிப்பு பலரின் பாராட்டுக்களை பெற்றிருந்தது. இந்த படம் மலையாளத்தில் பெரிய வெற்றிப்படமாகவும் அமைந்தது.
By honouring a film that spreads blatant misinformation with the clear intent of tarnishing Kerala’s image and sowing seeds of communal hatred, the jury of the #NationalFilmAwards has lent legitimacy to a narrative rooted in the divisive ideology of the Sangh Parivar. Kerala, a…
— Pinarayi Vijayan (@pinarayivijayan) August 1, 2025
ஆடு ஜீவிதம் திரைப்படம் 2009-ம் ஆண்டு சிறந்த நாவலுக்கான சாகித்ய அகாடமி விருதை பெற்றிருந்தது. இந்த திரைப்படம் 2024-ம் ஆண்டு வெளியாகி இருந்தாலும், 2023-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31-ந் தேதி சென்சார் செய்யப்பட்டுள்ளது. ஆனாலும், இந்த படத்திற்கு விருதுகள் அறிவிக்கப்படாதது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து கேரளா மாநில முதல்வர் பினராயி விஜயன் தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.
கேரளாவில் சர்ச்சையை ஏற்படுத்திய தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு, 3 தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட ஆடு ஜீவிதம் திரைப்படத்திற்கு விருது கிடைக்காதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.