Atlee and Priya Atlee: தமிழ் சினிமாவில் நடிகர்கள், இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள், பாடகர்கள் என எத்தனையோ நட்சத்திர தம்பதியினர் இருக்கிறார்கள். ஆனால் அதில் ஒரு சில தம்பதியினரின் நடவடிக்கைகள் மட்டும் ரசிகர்களால் கூர்ந்து கவனிக்கப்படும்.
Advertisment
அந்த வகையில் இயக்குநர் அட்லீ அவரது மனைவி பிரியா அட்லீ இருவரும் ரசிகர்களின் ஃபேவரிட் கப்பிளாக வலம் வருகின்றனர். இவர்கள் இருவரும் பொது இடங்களுக்கு வரும் போதும், வெளியிடங்களுக்கு சுற்றுலா செல்லும் போதும், அந்தப் படங்கள் இணையத்தில் வெளியாகி, ரசிகர்களிடம் அதிக கவனத்தை ஈர்க்கும்.
இதற்கு முக்கியக் காரணம், மிகக் குறைந்த வயதிலேயே மூன்று படங்களை இயக்கி முடித்து அதில் மாபெரும் வெற்றிப் பெற்றிருக்கிறார் அட்லீ. அதோடு தனது 4-வது படத்தில் 3-வது முறையாக தளபதி விஜய்யை ஹீரோவாக வைத்து இயக்கியிருக்கிறார். ‘பிகில்’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ள அந்தப்படம், வரும் தீபாவளிக்கு வெளியாகிறது.
அட்லீயின் மனைவியான பிரியா, கல்லூரியில் படிக்கும் போதே நடிப்பு மற்றும் நடனத்தின் மீது மிகவும் ஆர்வம் கொண்டவர். இதனால் கல்லூரியில் நடத்தப்பட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளில் பங்கு பெற்றார். சீரியல் மற்றும் சினிமாவில் நடித்த பிரியா திருமணத்துக்குப் பிறகு நடிப்பதை விட்டு விட்டு, தன் கணவர் அட்லியுடன் பட பூஜைகள் மற்றும் விழாக்களில் மட்டும் கலந்துக் கொள்கிறார்.
இந்நிலையில், தனது யோகா ஆசிரியருடன் யோகா செய்யும் போது எடுத்துக் கொண்ட சில படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்தார் பிரியா. யோகா மாஸ்டர் மல்லாந்து படுத்து தன் இரு கால்களையும் மேலே தூக்க, அவரின் அடிக்காலில் தன் வயிற்றை வைத்து அந்தரத்தில் மிதந்தார் பிரியா. இந்தப் படத்திற்கு ஒருபுறம் லைக்ஸ் மழை பொழிந்தாலும், மறுபுறம் யோகா மாஸ்டருடன் இப்படியான படங்கள் தேவையா எனவும் ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள். இருப்பினும் சாகசம் போல் பிரியா செய்திருக்கும் இந்த போஸை பாராட்டித்தான் ஆக வேண்டும்.