priya bhavani shankar: விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை மெகாத்தொடர் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான பிரியா பவானி சங்கர், தற்போது திரைத்துறையில் முக்கிய நடிகையாக வளம் வருகிறார். மேயாத மான், கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், மாபியா என பல்வேறு படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அண்மையில், அவர் லீட் ரோலில் நடித்திருந்த Blood money திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர், அவ்வப்போது ரசிகர்களுடன் கலந்துரையாடுவது வழக்கம். அந்த வகையில், அண்மையில் இன்ஸ்டாவில் கேள்வி நேரத்தின் போது ரசிகர் ஒருவர், உங்க Bra சைஸ் என்ன என கேள்வி எழுப்பினார்.
பெரும்பாலும் இத்தகைய கேள்விகளுக்கு பதிலளிக்காமல் விடுவது வழக்கம். ஆனால், பிரியா பவானி சங்கரின் பதிலடி ரிப்ளை கவனத்தை ஈர்த்துள்ளது.

அவர் பதில், நான் 34டி சகோதரரே.மார்பகங்கள் நான் வேறு கிரகத்தில் இருந்து வாங்கியது இல்லை. உங்கள் வாழ்க்கையில் உள்ள பெண்களுக்கும் ஒரு ஜோடி மார்பகங்கள் உண்டு. ஒருவேளை நீங்கள் உங்கள் பார்வையை zoom செய்து டி-ஷர்ட் வழியாக பார்த்தால் தெரியும். அதற்கு வாழ்த்துக்கள்” என பதிவிட்டிருந்தார்.
நடிகை பிரியா பவானி சங்கரின் இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil