ஓவியாவையே ஓரங்கட்டிவிட்டு இன்ஸ்டாகிராமில் சாதனை படைத்தார் பிரியா பிரகாஷ் வாரியர்!

பிரியாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை தற்போது 2.3 மில்லியன் ரசிகர்கள் பின் தொடர துவங்கியுள்ளனர்

2018-ஆம் ஆண்டு காதலர் தின வாரத்துக்கு கிஃப்டாக வந்துள்ள கண்ணழகி, பிரியா பிரகாஷ் வாரியரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை மில்லியன் ரசிகர்கள் பின் தொடர்ந்துள்ளனர்.

விரைவில் வெளிவரவிருக்கும் ’ஒரு அடார் லவ்’ மலையாள திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் ’மணிக்ய மலரய பூவி’ பாடலில், பிரியா பிரகாஷ் கண் அசைவுகள் அனைவரது உள்ளத்தையும் கொள்ளையடிக்கும் விதமாக அமைந்தது. அதன் பின்பு அவர் ஒரே நாளில் பிரபலம் ஆனார். ‘ஜிமிக்கி கம்மல்’ புகழ் ஷெரிலுக்குப் பிறகு பிரியா பிரகாஷ்தான் இளைஞர்களின் ஹாட் சென்சேஷன்.

ஃபேஸ்புக், யுடூயூப், ட்விட்டர் என எந்த பக்கம் திரும்பினாலும் பிரியாவின் பாடல் குறித்த பேச்சு தான். அந்த பாடலை வைத்து, மீம்ஸ், வீடியோ மீம்ஸ், ஜிஃப் என இணையமே சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது. அத்துடன், பிரியா பிரகாஷ் கொடுக்கும் எக்ஸ்பிரஷனுடன் கேப்டன் விஜயகாந்த் வெர்ஷன், மோடி வெர்ஷன், மிஸ்டர் பீன் வெர்ஷன், ராகுல் காந்தி வெர்ஷன், ட்ரம்ப் வெர்ஷன், விஜய், அஜித் என அனைத்து நபர்களையும் வைத்து நெட்டிசன்கள் இணையத்தில் விளையாடி வருகின்றனர். இந்நிலையில், காதலர் தினமான இன்று. ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக ’ஒரு அடார் லவ்’படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

இந்த டீசரில் பிரியாவின் முத்தக்காட்சிகள் பட்டித் தொட்டி எங்கும் பரவத் தொடங்கியுள்ளது. இது ஒரு பக்கம் இருக்க, பிரியாவின் ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தள பக்கங்களையும் ரசிகர்கள் விட்டு வைக்கவில்லை. பிரியாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை தற்போது 2.3 மில்லியன் ரசிகர்கள் பின் தொடர துவங்கியுள்ளனர். ஒரே நாள் இரவில் பிரியா மில்லியன் ரசிகர்களை பெற்றிருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இன்ஸ்டாகிராமில் அதிகப்படியான வாலோவர்ஸ்களை கொண்டுள்ள ஓவியா, துல்கர் சல்மான், அனுஷ்கா ஷெட்டி, மோகன்லால், திரிஷா, அமலா பால் என அனைத்து பிரபலங்களை விட பிரியாவை அதிக நபர்கள் பின் தொடர்ந்து உள்ளனர். எப்படி இது சாத்தியம்? என்று நடிகைகள் பலர் முனுமுனுப்பதாகவும் சினிமா வட்டாரங்கள் கூறிவருகின்றனர்.

×Close
×Close