/tamil-ie/media/media_files/uploads/2018/03/priya-prakash-varrier-759.jpg)
பிரியா வாரியர்
காலா திரைப்படத்தின் டீஸரை கண்ணசைவு மூலம் இளைஞர்களின் மனதைக் கொள்ளையடித்த பிரியா பிரகாஷ் வாரியர் தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
ரஜினி நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கியுள்ள ’காலா’ திரைப்படத்தின் டீஸர் நேற்று (வெள்ளிக்கிழமை) வெளியானது. வெளியான சில மணிநேரத்திலேயே அந்த டீஸரை லட்சக்கணக்கானோர் யுடியூபில் பார்த்தனர்.
பல பிரபலங்களும் அந்த டீஸரை பகிர்ந்து படம் வெற்றியடைய வாழ்த்தினர். இதனிடையே, டீஸர் வெளியானவுடனேயே அதையொட்டி சமூக வலைத்தளங்களில் விவாதம் கிளம்பியது. விடுதலை சிறுத்தை கட்சி பொதுச் செயலாளர் ரவிக்குமார், காலா டீஸரில் அம்பேத்கரின் முழக்கம் வணிக ரீதியாக பயன்படுத்தப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.
இதனிடையே, ‘ஒரு அடார் லவ்’ எனும் வெளியாகவிருக்கும் மலையாள திரைப்படத்தில் ‘மணிக்ய மலரய பூவி’ பாடலில் கண்ணசைவால் எல்லோரையும் கட்டிப்போட்ட பிரியா பிரகாஷ் வாரியர், காலா திரைப்பட டீஸரை தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார். அதில், காலாவில் ரஜினி பேசும் வசனம் “கியா ரே?? செட்டிங்கா? வேங்கை மகன் ஒத்தையில நிக்கன். தில்லு இருந்தா மொத்தமா வாங்கலே”, என பதிவிட்டுள்ளார். மேலும், ‘தலைவர் ராக்ஸ்’ எனவும் குறிப்பிட்டுள்ளார்.
Kyara?? Setting uh... Vengai Mayan Othaiyila Nikka... Thil Irutha Mothama Vangale.. #Thalaivar rocks #KaalaTeaserhttps://t.co/zo5SBg6Fhd
— Priya Prakash Varrier (@priyapvarrier) 1 March 2018
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.