Advertisment

விலகிய சீரியலில் ரீ-என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை : திருப்பங்களுடன் சன் டி.வி சீரியல்

Actress Priya prince post insta story on her re-entry to Kannana Kanne serial Tamil News: கண்ணான கண்ணே சீரியலில் நடித்து வந்த நடிகை ப்ரியா சொந்த காரணங்களால் விலகி இருந்த நிலையில், தற்போது ரீ என்ட்ரி கொடுக்கவுள்ளார்.

author-image
WebDesk
Dec 21, 2021 10:55 IST
Priya Prince Tamil News: Priya gives re -entry to Kannana Kanne serial

Priya Prince Tamil News: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'கண்ணான கண்ணே' சீரியலில் முக்கிய ரோலில் நடித்தவர் ப்ரியா பிரின்ஸ். சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமாகிய இவர், ரியாலிட்டி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் அனைவருக்கும் பரீட்சயமானார். தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான "என் பெயர் மீனாட்சி" மூலம் சீரியலில் என்ட்ரி கொடுத்தார் ப்ரியா.

Advertisment
publive-image

இந்த சீரியலைத் தொடர்ந்து EMI-தவணை முறை வாழ்கை, மாப்பிள்ளை, பொன்மகள் வந்தாள், கண்மணி உள்ளிட்ட சீரியல்களிலும் நடித்தார். ஆனால், இவர் நடித்த "தமிழ்க்கடவுள் முருகன்" சீரியல் இவரை பட்டிதொட்டியெல்லாம் பிரபலமானவராக மாற்றியது. இதன் மூலம் சினிமாவிலும் என்ட்ரி கொடுத்தார் ப்ரியா. குறிப்பாக பசங்க 2, 2.0, நடுவண் போன்ற படங்களில் முக்கிய வேடத்தில் நடித்தார்.

publive-image

மலையாளத்திலும் சில சீரியல்களில் நடித்துள்ள ப்ரியா, கடைசியாக தமிழில் சன் டிவியின் "கண்ணான கண்ணே" சீரியலில் நடித்தார். சில சொந்த காரணங்களால் இந்த சீரியலில் இருந்து சில மாதங்களுக்கு முன் இவர் விலகினார். இந்நிலையில், தற்போது மீண்டும் இந்த சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ளார்.

publive-image

இது குறித்து தனது இன்ஸ்டா ஸ்டோரியில் வெளிப்படுத்தியும் இருக்கிறார் ப்ரியா. தற்போது சில திருப்பங்களுடன் அரங்கேறி வரும் கண்ணான கண்ணே சீரியல் ப்ரியாவின் ரீ என்ட்ரிக்கு மேலும் விறுவிறுப்படைய வாய்ப்பு அதிகம் என ரசிகர்கள் தெரிவிக்கிறார்கள்.

publive-image

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Serial Actress #Suntv Serial #Tamil Serial News #Priya Prince #Tv Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment