பிரியா பவானி சங்கரையும் நீங்க விட்டுவைக்கலயா!!!

பிரியா பவானி சங்கரின் ஒரிஜினல் டுவிட்டர் ஐடிக்கு 77 ஆயிரம் பாலோயர்கள் தான். ;போலி ஐடிக்கு கிட்டத்தட்ட 5 லட்சம் பாலோயர்கள்.....

பிரியா பவானி சங்கரின் ஒரிஜினல் டுவிட்டர் ஐடிக்கு 77 ஆயிரம் பாலோயர்கள் தான். ;போலி ஐடிக்கு கிட்டத்தட்ட 5 லட்சம் பாலோயர்கள்.....

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
priyabhavani shankar, meyadha man, kadaikutti singam, monster, twitter, modi, பிரியா பவானி சங்கர், மேயாத மான், கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், டுவிட்டர், மோடி

priyabhavani shankar, meyadha man, kadaikutti singam, monster, twitter, modi, பிரியா பவானி சங்கர், மேயாத மான், கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், டுவிட்டர், மோடி

பிரதமர் மோடி குறித்து நடிகை பிரியா பவானி சங்கர் பெயரில் போலி டுவிட்டர் ஐடி வெளியிட்ட டுவிட், அந்நடிகையே கோபமடைய வைத்துள்ளது.

Advertisment

நடிகை பிரியா பவானி சங்கர், தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகை. மேயாத மான், கடைக்குட்டி சிங்கம் படங்களை தொடர்ந்து மான்ஸ்டர் படத்தில் நடித்துள்ளார். எஸ்.ஜே. சூர்யா, கருணாகரன் நடிப்பில் உருவாகியுள்ள மான்ஸ்டர் படத்தில் பிரியா பவானி சங்கரின் நடிப்பை, அனைவரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில், அவர் பெயரிலான டுவிட்டர் ஐடியிலிருந்து வெளியாகியுள்ள மோடி குறித்த டுவிட், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த டுவிட்டில் குறிப்பிட்டுள்ளதாவது, நிரந்தர பிரதமர் நரேந்திர மோடி சாருக்கு வாழ்த்துகள், மோடி ரிட்டர்ன்ஸ் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த டுவிட்டை பலரும் ரீடுவிட் செய்திருந்தனர்.

இதனிடையே, பிரியா பவானி சங்கர் அது தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கமே இல்லையென்றும், அது தன்னுடைய பெயரிலான போலி டுவிட்டர் பக்கம். யாரும் ஏமாற வேண்டாம் என்று ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Advertisment
Advertisements

அந்த போலி டுவிட்டுக்கு அவர் அளித்துள்ள பதிலில் தெரிவித்துள்ளதாவது,

அப்படியே மோடிக்கும் ஒரு அக்கவுண்ட் கிரியேட் பண்ணி பிரைம் மினிஸ்டர் மாதிரியே டுவிட் போட்றலாமே, போலி அக்கவுண்ட்டுக்கு எதுக்குடா இவ்வளவு எமோஷன் என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

இதில் ஆச்சரியப்படத்தக்க விசயம் என்னவென்றால், பிரியா பவானி சங்கரின் ஒரிஜினல் டுவிட்டர் ஐடிக்கு 77 ஆயிரம் பாலோயர்கள் தான். ;போலி ஐடிக்கு கிட்டத்தட்ட 5 லட்சம் பாலோயர்கள்.....

முடியலடா சாமி!!!

Twitter Priya Bhavani Shankar

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: