சன் டிவியில ஒண்னு… விஜய் டிவியில ஒண்னு… DD அக்கா PD ரீ என்ட்ரி!

Priyadharshini re entry serials in sun tv and vijay tv: சின்னத்திரையில் ரீ-எண்ட்ரி ஆகும் ப்ரியதர்ஷினி; சன் டிவியில் சிங்கப்பெண்ணே சீரியல், விஜய் டிவியில் நம்ம வீட்டு பொண்ணு சீரியல்

சன் டிவி சீரியல் மற்றும் விஜய் டிவி சீரியல் மூலம் மீண்டும் சின்னத்திரைக்கு திரும்பியிருக்கிறார் ப்ரியதர்ஷினி.

விஜய் டிவியில் முன்னனி தொகுப்பாளினியாக இருந்து வருபவர், டிடி என அனைவராலும் செல்லமாக அழைப்பட்டு வரும் திவ்யதர்ஷினி. இவரது சகோதரி ப்ரியதர்ஷினியும் பிரபல தொகுப்பாளினி தான். இவர் தமிழ் தொலைக்காட்சி சேனல்களில் தொகுப்பாளினியாக இருந்து வருகிறார். திரைப்பட விழாக்கள் மற்றும் இசை வெளியீட்டு விழாக்கள் ஆகியவற்றையும் தொகுத்து வழங்கி வருகிறார். ப்ரியதர்ஷினி சில ஆண்டுகளுக்கு முன்னர் ரமணா கிஷோர் என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு, ரிஷி என்ற மகன் இருக்கிறார்.

ப்ரியதர்ஷினி ’தாவணி கனவுகள்’, ‘இதயக்கோவில்’, ’இதயத்தை திருடாதே’, ’உயிரே உனக்காக’, உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். மேலும் சுப யாத்ரா என்ற மலையாளப் படத்திலும் நடித்துள்ளார். தெலுங்கில் நாக தேவதை என்ற படத்திலும் நடித்துள்ளார். அதன் பின்னர் டிவிகளில் தொகுப்பாளினியாக மானாட மயிலாட உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். பாய்ஸ் vs கேர்ள்ஸ் நிகழ்ச்சியில் நடன போட்டியாளராகவும் கலந்துக் கொண்டார்.

இதனிடையே ப்ரியதர்ஷினி, கல்கி, காளிதாஸ், புலி வருது உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்து வந்தார். திரைப்படங்கள் மட்டுமல்லாது, பல்வேறு சேனல்களில், அக்னிப்பரீட்சை, எத்தனை மனிதர்கள், விழுதுகள், கனவுகள் இலவசம், கோலங்கள், வசந்தம், மை டியர் பூதம், தமிழ் கடவுள் முருகன் உள்ளிட்ட சீரியல்களிலும் நடித்துள்ளார்.

தற்போது, ஹாட் & கூல் மீடியா என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வரும் ப்ரியதர்ஷினி, திரைப்படங்களுக்கு விமர்சனம் செய்து வருகிறார். திருமணத்திற்கு பிறகு நடிப்பதை தவிர்த்து வந்த ப்ரியதர்ஷினி, தற்போது மீண்டும் சின்னத்திரையில் எண்ட்ரியாகிறார்.

ப்ரியதர்ஷினி, விஜய் டிவியில் ஒளிப்பரப்பாக உள்ள நம்ம வீட்டு பொண்ணு சீரியலில் நடித்து வருகிறார். இதேபோல் சன் டிவியில் விரைவில் ஒளிப்பரப்பாக உள்ள சிங்கப் பெண்ணே என்ற சீரியலிலும் நடிக்கிறார். இந்த இரு சீரியல்களின் படப்பிடிப்பு தளங்களில் எடுக்கப்பட்ட ப்ரியதர்ஷினியின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Priyadharshini re entry serials in sun tv and vijay tv

Next Story
உள்ளே வரும் புது நடிகை; வெண்பா மாறிட்டாங்களா? பாரதி கண்ணம்மா லேட்டஸ்ட் அப்டேட்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com