Advertisment
Presenting Partner
Desktop GIF

ஷாருக்கான் அளவுக்கு முக்கியத்துவம்... நயன்தாரா வெற்றி ரகசியம் இதுதான் : பிரியாமணி பேட்டி

ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் திரைத்துறையில் மெதுவாக பெண்களை மையப்படுத்திய படங்கள் எப்படி வெளியாகிறது என்பதைப் பற்றி நடிகை பிரியாமணி கூறியுள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Priyamani12

இந்திய சினிமாவில் ஆண் ஆதிக்கம் குறித்து பிரியாமணி பேட்டி

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

நடிகை நயன்தாரா தனது சினிமா வாழ்க்கையை சரியான சமநிலையுடன் வைத்திருக்கிறார். ஷாருக்கானுடன் இணைந்து ஜவான் படத்தில் நடித்தபோது கூட ஷாருக்கானுக்கு இணையாக அவருக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது என்று நடிகை பிரியாமணி கூறியுள்ளார்.

Advertisment

பருத்திவீரன் படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகை பிரியாமணி தற்போது பாலிவுட்டில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். கடந்த ஆண்டு ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கத்தில் வெளியான ஜவான் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்த பிரியாமணி, ஆர்ட்டிக்கிள் 370 படத்தின் மூலம் 2024-ம் ஆண்டை பாலிவுட்டில் தொடங்கினார்.

அதனைத் தொடர்ந்து தற்போது அஜய் தேவ்கன் நடிப்பில் வெளியாகியுளள் மைதான்படத்தில் அவரின் மனைவியாக நடித்துள்ளார். இந்த படம் வெளியாவதற்கு முன்னதாக இந்தியன் எக்ஸ்பிரஸூடனான நேர்காணலில் பங்கேற்ற பிரியாமணி, தனது சினிமா பயணம்,சமீபத்திய படங்களின் வெற்றி, பெண்களை மையமாகக் கொண்ட திரைப்படங்கள் மற்றும் இந்திய சினிமா இன்னும் ஆண் ஆதிக்கத்தில் உள்ளதா என்பது குறித்து தனது கருத்தைப் பகிர்ந்து கொண்டார்.

உங்கள் வெற்றியை எப்படி எதிர்கொள்கிறீர்கள்?

 நான் இன்னும் வெற்றியைக் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. எனது முந்தைய படங்கள் வந்த விதம் மற்றும் அதில் எனக்கு கிடைத்த வரவேற்பு மற்றும் மக்களின் அன்பு அதனை நினைத்து மகிழ்ச்சியடைகிறேன். பாக்ஸ் ஆபிஸ் வசூல் எனக்கு முக்கியமில்லை, படத்தை பார்த்து எல்லோரும் படத்தை பார்த்து மகிழ்ச்சியாக இருப்பது தான் எனக்கு முக்கியம்.

ஒரு படம் சில 100 கோடிகளை சம்பாதித்தாலும், பாக்ஸ் ஆபிஸில் வசூலில் சாதனை படைத்தால் அந்த வேலிடிட்டி எனக்கு தேவையில்லை என்று நினைக்கிறேன். நான் இப்போது இருக்கும் இடத்தை சரிபார்க்க படத்தின் வசூல் நிலவரம் எனக்கு அது அவசியமில்லை. படத்தின் எனது கேரக்டரை பார்த்து மக்களிடம் இருந்து கிடைக்கும் அன்புதான் எனக்கு அங்கீகாரம்.

இந்திய சினிமாவில் ஆண்களின் ஆதிக்கம் மற்றும் பெண்களை மையமாகக் கொண்ட படங்கள் எப்படி எடுக்கப்படுகின்றன?

நான் திரைத்துறையில் நுழைந்த காலத்திலிருந்தே, பெண்களை மையமாக வைத்து எடுக்காத ஆண்களை முன்னிறுத்திய பல படங்களில் நடித்திருக்கிறேன். ஆண்களை மையமாகக் கொண்ட திரையுலகில் மிகச் சில படங்களே பெண்களை மையமாகக் கொண்ட திரைப்படங்களாக வெளியாகி வருகிறது. இதற்கு தென்னிந்தியப் படங்கள் சிலவற்றைத் உதாரணமாக சொல்லலாம். அதே சமயம் மொத்தப் படத்தையும் பெண்கள் தோளில் சுமந்து செல்லும் பல படங்கள் இப்போது வருகின்றன.

தென் மாநிலங்களில் பல படங்களில் நடிகைகள் முன்னணியில் உள்ளனர். இதற்கு நயன்தாரா ஒரு சிறந்த உதாரணம், அவர் தனது வாழ்க்கையை மிகவும் அழகாக சமன் செய்துள்ளார், அவர் பெண்களை மையமாகக் கொண்ட படங்களில் சிறப்பாக நடித்து வருகிறார். அதே போன்று ஜவான் போன்ற படத்தையும் சிறப்பாக செய்கிறார். படத்தில் ஷாருக்கானுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதோ, அதே அளவுக்கு அவருக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. இதுதான் அவர் உருவாக்கிய ஒரு அழகான சமநிலை உள்ளது. சமந்தாவைப் போன்ற மற்றவர்களும் பெண்களை மையமாகக் கொண்ட திரைப்படங்களை தேர்வு செய்து நடிப்பில் சிறப்பாகச் செயல்படுகிறார்கள்.

ஜவான் அல்லது ஆர்டிகிள் 370 வெற்றிக்குப் பிறகு உங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட பெரிய மாற்றம்?

இந்த படங்களின் வெற்றி எனது வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தவில்லை என்பதை உணர்ந்தாலும், அதைப்பற்றி எதுவும் சொல்ல முடியாது. நான் ஒரு படத்தைத் தேர்வு செய்வதிலும், அந்த படத்தில் நடிக்க சரி என்று சொல்வதிலும் அதிக நேரத்தை எடுத்துக்கொள்கிறேன். ஹிந்திப் படம் என்பதால் எல்லா படத்திலும் நடிக்க விரும்பவில்லை. படங்களை தேர்வு செய்து நடிப்பதால் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். அதே சமயம் வித்தியாசமான கேரக்டரில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன்.

படங்களை தேர்ந்தெடுக்கும் அணுகுமுறை இப்போது மாறிவிட்டதா?

ஒரு படத்திற்கு கதை நன்றாக இருக்க வேண்டும் என்பதில் ஆரம்பத்திலிருந்தே நான் தெளிவாக இருக்கிறேன். அதேபோல் நான் ஹீரோவுடன் ரொமான்ஸ் செய்ய வேண்டிய ஒரு படத்துக்காக என்னை அணுகுகிறார்கள் என்று நான் சொல்லவில்லை, ஆனால் அதையும் செய்ய விரும்புகிறேன். அதை நான் ஒருபோதும் வேண்டாம் என்று சொல்ல மாட்டேன். அதே சமயம் நான் இனி ஒரு பாடலுக்கு நடனமாடும் கேரக்டரில் நடிக்க விரும்பவில்லை. எனது கதாபாத்திரத்திற்கு ஏதாவது முக்கியமானதாக இருந்தால், நான் அதை ஏற்றுக்கொள்வேன். கதை சொல்லல் மற்றும் கதைக்கரு இப்போது மிகவும் வித்தியாசமாக உள்ளது. உலகம் முழுவதிலுமிருந்து ஏராளமான கதைகள் வருகின்றன. காலம் மாறிக்கொண்டே இருக்கிறது, நல்ல கதைகள் வருகின்றன,” என்று பிரியாமணி மேலும் கூறுகிறார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Priyamani
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment