Advertisment

ஐ.பி.எல் மேட்ச் காதல்; மதம் கடந்து திருமணம்: ட்ரோல்களுக்கு ப்ரியாமணி பதிலடி

ப்ரியாமணி தனது நீண்ட நாள் காதலரான முஸ்தபா ராஜை 2017ம் ஆண்டு பெங்களூருவில் திருமணம் செய்து கொண்டார்.

author-image
WebDesk
New Update
Priyamani

நடிகை ப்ரியாமணி 2016 ஆம் ஆண்டு தனது நீண்டகால காதலரான முஸ்தபா ராஜ் உடனான நிச்சயதார்த்தத்தை அறிவித்த பின்னர் அவர் சமூக வலைதளங்களில் குறிவைக்கப்பட்டார். பெங்களூரில் நடந்த ஒரு ஐ.பி.எல் போட்டியில் இருவரும் சந்தித்துக் கொண்டனர். நட்பாக பழகி பின்னர் காதலராக வலம் வந்தனர். 

Advertisment

ஆனால் இவர்களின் உறவு விரைவில் சர்ச்சையில் சிக்கியது, முக்கியமாக அவர்கள் வெவ்வேறு 
மதம் என்ற காரணத்திற்காக சமூக வலைதளங்களில் குறிவைக்கப்பட்டனர். அவர்கள் 2017ம் ஆண்டு கலப்பு திருமணம் செய்து கொண்ட போதும் கூட இப்போது வரை விமர்சிக்கப்படுவதாக கூறினார். 

சமீபத்தில் பிலிம்பேருக்கு அளித்த பேட்டியில், ப்ரியாமணி தனது திருமண வாழ்க்கை பற்றி மனம் திறந்தார். அப்போது நாங்கள் எங்களது பெற்றோர்கள் சம்மதத்துடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டதாக ஃபேஸ்புக்கில் பதிவிட்டேன். ஆனால் அதற்கு கடுமையான விமர்சனங்கள் வந்தன. 

"ஜிஹாத், முஸ்லீம், உங்கள் குழந்தைகள் பயங்கரவாதிகளாக மாறுவார்கள்" என்று எனக்கு கமெண்ட்கள் வந்தன என்றார். தொடர்ந்து இது போன்ற பதிவுகள் மனவருத்தமளிக்கிறது. இந்த குறிப்பிட்ட 2 மதத்தில் கலப்பு திருமணம் செய்பவர்கள் மீது மட்டும் ஏன் இந்த தாக்குதல்? 

Advertisment
Advertisement

சாதி, மதம் கடந்து பல முன்னணி நடிகர்கள் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.அவர்கள் மத வேறுபாடின்றி ஒருவரைக் காதலித்தார்கள். இதை சுற்றி ஏன் இவ்வளவு வெறுப்பு இருக்கிறது என்று எனக்கு புரியவில்லை என்றார். 

மேலும் கூறிய ப்ரியாமணி நான் சமீபத்தில் ஈத் பண்டிகைக்கு சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தேன். அப்போது யாரோ நீங்கள் இஸ்லாத்திற்கு மாறிவிட்டீர்கள் என்று பதிவிட்டிருந்தார். “நான் மதம் மாறிவிட்டேன் என்று உங்களுக்கு எப்படித் தெரியுமா? இது என் முடிவு” என்றாள்.

நான் திருமணம் செய்வதற்கு முன்பே முஸ்தபாவிடம் தெரிவித்துவிட்டேன். நான் மதம் மாறமாட்டேன் என்று. "நான் இந்துவாக பிறந்தேன். எப்போதும் என் நம்பிக்கையைப் பின்பற்றுவேன்," என்று கூறினார். அதே நேரம் தாங்கள் இருவரும் ஒருவரின் நம்பிக்கைகளை மதிப்பதாக கூறினார். 

ஆங்கிலத்தில் படிக்க:     Priyamani opens up about interfaith marriage with Mustafa Raj; says she refused to convert, but is targeted by trolls

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment