ஜவான் படப்பிடிப்பு குறித்து பிரியாமணி பேசினார். (புகைப்படம்: Screengrab, Priyamani/Instagram)
பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான், ஜவான் படத்தின் பிரம்மாண்டமான “ஜிந்தா பந்தா” பாடல் படப்பிடிப்பில் நடனமாடும் போது பிரியாமணி தனக்கு அருகில் நின்று ஆடுவதை உறுதி செய்துக் கொண்டார் என நடிகை பிரியாமணி நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். இருவரும் முன்பு சென்னை எக்ஸ்பிரஸில் "ஒன் டூ த்ரீ ஃபோர் கெட் ஆன் தி டான்ஸ் ஃப்ளோர்" என்ற மற்றொரு சார்ட்பஸ்டர் டிராக்கில் சிறப்பான டான்ஸ் ஆடினார்.
Advertisment
கனெக்ட் எஃப்.எம் கனடாவுக்கு அளித்த பேட்டியில், நடிகர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட முதல் செட் நடன அமைப்பிற்கு ஒத்திகை பார்க்கும்போது, தான் ஷாருக்கின் பின்னால் நிறுத்தப்பட்டதாக ப்ரியாமணி கூறினார். ஷாரூக் கான் செட்டுக்கு வந்ததும், ப்ரியாமணி எங்கே என்று சுற்றிப் பார்த்தார், அவர் பின்னால் இருப்பதைக் கவனித்தார்.
உடனே ஷாருக்கான் நடன இயக்குனர் ஷோபி மாஸ்டர் மற்றும் இயக்குனர் அட்லீயிடம் பிரியாமணி தனக்கு அருகில் நின்று ஆட வேண்டும் என்று கூறியதாக பிரியாமணி கூறினார், ஏனெனில் பிரியாமணி சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் இருந்து தனது "டான்ஸ் டீச்சராக" இருந்து வருகிறார், மேலும் நான் எனது ஸ்டெப்ஸ்களை மறந்தால், பிரியாமணியை பார்த்து ஆடுவேன் என்று ஷாரூக் கான் கூறினார்.
“ஷாரூக் கான் என்னிடம், ‘என் பின்னால் என்ன செய்கிறாய்?’ என்றார், நான் ‘எனக்குத் தெரியாது சார். அவர்கள் என்னை உங்கள் பின்னால் நிறுத்தினார்கள். இங்கு நின்று ஆடச் சொன்னார்கள்.’ என்று கூறினேன். அதற்கு ஷாரூக் கான் ‘இல்லை’ என்று சொல்லி, என் கையைப் பிடித்து, என் தோளைப் பிடித்து, என்னைத் தன் அருகில் நிற்க வைத்தார். ஷாரூக் கான் ஷோபி மாஸ்டரிடமும், அட்லீ சாரிடம், ‘இந்தப் பொண்ணு என் பக்கத்துல நிக்கணும். நடனம் எப்படி இருந்தாலும் எனக்கு கவலையில்லை. எனக்கு எதுவும் கிடைக்க வேண்டாம். சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் இருந்து எனக்கு நடன ஆசிரியர் பிரியாமணி தான். நான் தவறு செய்தாலும் எனக்கு கவலையில்லை. நான் பிரியாமணியை மட்டும் பார்த்து ஆடப் போகிறேன், நாங்கள் அப்படித்தான் செய்யப் போகிறோம், என்று கூறினார்.
Advertisment
Advertisements
“அவர் ஒவ்வொரு ஸ்டெப்ஸிலும் என்னிடம், ‘எப்படிச் செய்கிறீர்கள் என்று சொல்லுங்கள்’ என்று கேட்பார். நான், ‘சார், கை இப்படித்தான், கால் அப்படித்தான், நாம் இந்த வழியில்தான் செல்ல வேண்டும்’ என்றேன். பாடலில் நீங்கள் உண்மையில் கவனித்தால், சன்யா மல்ஹோத்ரா அவரது வலதுபுறத்திலும், நான் இடதுபுறத்திலும் இருப்போம். எனவே, நாங்கள் அவருக்கு பக்கத்தில் இருக்க வேண்டும் என்று அவர் எப்போதும் விரும்பினார்,” என்று பிரியாமணி கூறினார்.
வேலையின் மீதான ஷாரூக் கானின் அர்ப்பணிப்பு குறித்து கூறிய பிரியாமணி, ஷாருக்கிடம் இருக்கும் அர்ப்பணிப்பை யாருடனும் "ஒப்பிட முடியாது" என்றார். ஷாருக் ஸ்டெப்ஸ்களை கச்சிதமாக ஆடுவதற்கு முழுமையாக ஒத்திகை பார்த்துக் கொண்டதாகவும், எதற்கும் மறுப்பு சொல்லவில்லை என்றும் பிரியாமணி கூறினார்.
"எனவே, இது சிறந்த நடனம் மற்றும் ஆற்றல் அற்புதமானது என்று நான் நினைக்கிறேன். மக்கள் பாடலை விரும்புகிறார்கள், இப்போதும் கூட நிறைய பேர் ரீல் செய்கிறார்கள், அவர்கள் அதை எங்களுக்கு அனுப்புகிறார்கள். அவர்கள் எங்களை டேக் செய்து, ‘இதோ பாருங்கள், ஜிந்தா பந்தா ஃபீவர். ஜவான் ஃபீவர் தொடர்கிறது.’ என்று பதிவிட்டு வருகின்றனர். அவை நன்றாக உள்ளது.” என்று பிரியாமணி கூறினார்.
ஷாரூக் கான் மற்றும் நயன்தாரா நடித்த, ஜவான் செப்டம்பர் 7 அன்று பிளாக்பஸ்டர் வரவேற்பைப் பெற்றது மற்றும் ஏற்கனவே உள்ள சாதனைகளை முறியடித்து புதிய சாதனைகளை படைத்து வருகிறது. 524 கோடி என அதிக வசூல் செய்த பாலிவுட் படமாக இருக்கும் ஷாருக்கானின் பதான் (இந்தி பதிப்பு) படத்தின் மொத்த வசூலை சவால் செய்யும் வகையில் ஜவான் திரைப்படம் வசூல் நடைபோட்டு வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“