‘தலைவி’ படம் : சசிகலா கதாபாத்திரத்தில் பிரியாமணி

தேசிய விருது பெற்ற பிரியாமணி தனக்கே உரித்தான பாணியின் மூலம் படத்திற்கான முழுமையை தேடித் தருவார் என்று படத்தின் இயக்குனர் நம்புவதாக கூறப்படுகிறது.

Priyamani will play the role of Sasikala in Thalaivi, the official Jayalalithaa biopic
Priyamani will play the role of Sasikala in Thalaivi, the official Jayalalithaa biopic

ஜெயலலிதாவின் அதிகாரப்பூர்வ  வாழ்க்கை வரலாற்றுப் படமான தலைவியில் கங்கனா ரனாவத் கதாநாயகியாக நடிக்கிறார். அப்பபடத்தில் சசிகலாவின்  கதாபாத்திரத்தில் பிரியாமணி நடிக்கவுள்ளார். பிரியாமணி அறிமுகப்படுத்துவதால் இந்தியா முழுவதுமுள்ள ரசிகர்களை சென்றடைய முடியும்  என்று   தயாரிப்பாளர்கள் கருதியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  ‘தலைவி’ படம் அறிவிக்கப்பட்டதிலிருந்து, முன்னாள் தமிழக முதல்வரின் தோழியான சசிகலா கதாபாத்திரத்தில் யார் நடிக்கவிருப்பிது என்று ஊடகங்கள் மத்தியில் கேள்வியும் எழுப்பப்பட்டது.

தேசிய விருது பெற்ற பிரியாமணி தனக்கே உரித்தான பாணியின் மூலம் படத்திற்கான முழுமையை தேடித் தருவார் என்று படத்தின் இயக்குனர் நம்புவதாக கூறப்படுகிறது.

பிரியாமணி படத்திற்கு மொத்த தேதிகளை வழங்கியதாக ஒரு வட்டாரம் கூறுகிறது. “இரண்டாவது பாதியில் கங்கனா காதபாத்திரத்தம் முழுவதும் பிரியாமணி காணப்படுவார்” என்று ஆதாரம் கூறுகிறது.


துபாயைச் சேர்ந்த தொழிலதிபருடன் திருமணம் செய்த பிறகு, தி ஃபேமிலி மேன் என்ற வலைத் தொடரில் மீண்டும் கலைத் துறையில் பயணத்தை தொடங்கினார் பிரியாமணி.

சமீபத்தில் வெளியான தலைவியின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் பலரின் கருத்துக்கு ஒத்துப்போகவில்லை . அரவிந்த் சுவாமி எம்.ஜி.ராமச்சந்திரனாக நடிக்கையில், ஜி.வி.பிரகாஷ் குமார் தலைவியின் படத்திற்கு இசை அமைக்கிறார்.

இதன் தயாரிப்பாளர் விஷ்ணு இந்தூரி செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில் , “ ‘தலைவி’ என்ற படைப்பு சொல்லப்பட வேண்டிய கதை. ஜெயலலிதா கதாபாத்திரத்தில் கங்கனா அவவளவு அற்புதமாக உள்வாங்கியுள்ளார். ஆச்சரியமாக இருக்கின்றது. இந்த படத்தை பார்வையாளர்களுக்கு வழங்க நாங்கள் மிகவும் காத்திருக்கின்றோம். ”

இயக்குனர் விஜய் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்திற்கு  பாகுபலி-புகழ் விஜயேந்திர பிரசாத் வசனங்கள் எழுதியுள்ளார்.

விஷ்ணு இந்தூரி மற்றும் ஷைலேஷ் ஆர் சிங் ஆகியோரால் தயாரிக்கப்படும் இந்த  வலைதொடர் ஜூன் 26, 2020 அன்று தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. படத்தின் இந்தி பதிப்பிற்கு ஜெயா என்று பெயரிடப்பட்டுள்ளது…….

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Priyamani will play the role of sasikala in thalaivi web series jayalalitha biopic

Next Story
‘அந்த நடிகருடன் டேட்டிங் போக விருப்பம்; அதுவும் தமிழகத்தின் நலனுக்காக’ – நடிகையின் ட்வீட்டால் ரசிகர்கள் குழப்பம்raiza wilson want to date with harish kalyan - 'தமிழகத்தின் நலனுக்காக அந்த நடிகருடன் டேட்டிங் செல்ல விரும்புகிறேன்' - ரைசா வில்சன்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express