பிரபல நடிகையுடன் கூட்டணி சேர்ந்த மாஜி கண்ணம்மா: என்னமோ திட்டம் வச்சிருக்காங்க!

டாக்டர் நடிகை பிரியங்கா அருள் மோகனுடன், பழைய கண்ணம்மா ரோஷினி ஹரிப்பிரியன் இருக்கும் வீடியோ அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

டாக்டர் நடிகை பிரியங்கா அருள் மோகனுடன், பழைய கண்ணம்மா ரோஷினி ஹரிப்பிரியன் இருக்கும் வீடியோ அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

சமீபத்தில் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திக்கேயன் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படம் அமோக வெற்றியடைந்தது. இதில் பிரியங்கா அருள், அர்ச்சனா, இளவரசன், தீபா, அருண் அலெக்சாண்டர், ரகுராம், மிலிந்த் சோமன் உள்பட பலர் நடித்திருந்தனர். இதில் பிரியங்கா அருள் மோகன் நடிப்பு ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. செல்லம்மா செல்லம்மா பாடலுக்கு அவர் பார்பி பொம்மை போல் ஆடும் வீடியோவும் வைரலானது.

ஒந்த் கதே ஹெல்லா என்ற கன்னட படத்தின் மூலம் பிரியங்கா அருள் மோகன் திரையுலகில் அறிமுகமானார். டாக்டர் பட வெற்றி இவருக்கு நல்ல பெயரை தேடித் தந்துள்ளது.  தற்போது பிரியங்கா டான் படத்தில் மீண்டும் சிவகார்த்திக்கேயனுடன் ஜோடி சேர்ந்துள்ளார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட திரையுலகில் இருந்து பிரியங்காவுக்கு படவாய்ப்புகள் வந்த வண்ணம் வந்த உள்ளன.

எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் பிரியங்கா, தனது இன்ஸ்டாகிராமில் அடிக்கடி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். சமீபத்தில் டாக்டர் குழுவுடன் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வைரலானது.

இந்நிலையில் பாரதி, கண்ணம்மா சீரியலில் முதலில் கண்ணம்மாவாக நடித்த ரோஷினியுடன் பிரியங்கா எடுத்துக் கொண்ட புகைப்படம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா தொடர் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து இல்லத்தரசிகள், இளம்பெண்கள், குழந்தைகள் என அனைவரின் விருப்பமான தொடராக உள்ளது. அதில் கண்ணம்மாவாக நடித்து அனைவரின் இதயங்களையும் கட்டிப்போட்ட ரோஷினி ஹரிப்பிரியன் சமீபத்தில் சீரியலில் இருந்து விலகினார். இது ரசிகர்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சியையும், வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து கண்ணம்மாவுக்கு நிறைய படவாய்ப்புகள் வந்ததால், தொடரிலிருந்து விலகியதாக தகவல் வெளியாகின.

இந்நிலையில், பிரியங்கா அருள் மோகனுடன், ரோஷினி இருக்கும் வீடியோ வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. இருவரும் ஏதாவது படத்தில் ஒன்றாக நடிக்கலாம் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Priyanka arul mohan with roshini haripriyan video goes on viral

Next Story
இது வெடிக்கிற திரியா ..? டிரைலர் எப்படி?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express