Priyanka Chopra – Nick Jonas: நடிகை பிரியங்கா சோப்ரா நடித்திருக்கும் ‘த ஸ்கை இஸ் பிங்க்’ திரைப்படம் டொராண்டோ திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. அதற்குக் கிடைத்த பாஸிட்டிவ் விமர்சனங்களால் தற்போது உற்சாகத்தின் உச்சியில் இருக்கிறார் அவர்.
இதுபற்றி பேசிய பிரியங்கா, ”இந்த படத்தில் எங்களுக்கு நிறைய குழந்தைகள் இருந்தன. எனக்கு குழந்தைகள் என்றால் மிகவும் பிடிக்கும். எனக்கு பெரியவர்களின் கம்பெனியை விட, குழந்தைகளின் கம்பெனி தான் மிகவும் பிடிக்கும். எனவே இந்த படத்தின் ஒரு பகுதியாக அவர்கள் இருப்பது ஆச்சரியமாக இருந்தது” என்றார்.
பிரியங்காவிடம் எப்போது குழந்தை பெற்றுக் கொள்ளப் போகிறீர்கள் எனக் கேட்கப்பட்ட போது, ‘நிச்சயமாக கடவுள் எங்களை ஆசிர்வதித்தால்’ என்றார். வீடு ஒன்றை வாங்குவதும், ஒரு குழந்தையைப் பெற்றுக் கொள்வதும் தனது செய்ய வேண்டிய பட்டியலில் உள்ளதாக சமீபத்தில் ஒரு முன்னணி பத்திரிக்கைக்கு பேட்டியளித்திருந்தார் இந்த குவாண்டிகோ நடிகை.
View this post on Instagram
The couple goals to end all couple goals ????❤️ #nickjonas #priyankachopra #nickyanka #mrandmrsjonas
இதற்கிடையே கடந்த 16-ம் தேதி பிரியங்காவின் கணவர் நிக் ஜோனஸ் தனது 27-வது பிறந்தநாளைக் கொண்டாடினார். அந்த நாளில் ஒரு இசை நிகழ்ச்சியை நடத்தினார் நிக். அப்போது ரசிகர்கள் பகிர்ந்த வீடியோக்களில், கூட்டத்தில் நிக் பிரியங்காவைத் தேடுவதைக் காண முடிகிறது. திடீரென கையில் சிவப்பு ரோஜாவுடன் பிரியங்கா வெளிப்படும் போது, புன்னகைக்கிறார் நிக். பின்னர் பிரியங்காவை நோக்கி நடந்து, கீழே குனிந்து, அங்கேயே அவரை முத்தமிடுகிறார் நிக். கையில் இருந்த சிவப்பு ரோஜாவை தன் காதல் கணவருக்கு பரிசளிக்கிறார் பிரியங்கா. கூட்டத்தில் ரசிகர்களின் சத்தம் வானை பிளக்கிறது.
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது!