Priyanka Chopra: நடிகை பிரியங்கா சோப்ரா தான் நடித்திருக்கும் ”தி ஸ்கை இஸ் பிங்க்” படத்தின் புரொமோஷனில் பிஸியாக இருக்கிறார். எத்தனை பிஸியாக இருந்தாலும் அகமதாபாத்தில் தாண்டியா ஆடும் வாய்ப்பை அவர் விட்டுவிடவில்லை.
பாட்டில் கிரீன் டிரடிஷனல் உடை, அதற்கு ஏற்றவாறு பாரம்பரிய நகைகளுடன் காட்சியளித்த பிரியங்கா, தாண்டியா குச்சிகளை வைத்துக் கொண்டு தனது சக நடிகர் ரோஹித் சராஃப் உடன் நடனம் ஆடினார். இந்தப் படத்தில் பிரியங்காவின் மகனாக ரோஹித் நடித்துள்ளார். இவர்களுடன் ஃபர்ஹான் அக்தர் மற்றும் ஜைரா வாசிம் ஆகியோரும் நடித்துள்ளனர். ஃபர்ஹான் தனது மற்ற வேலைகளில் பிஸியாக இருந்ததால், பட புரொமோஷனுக்காக பிரியங்காவும் ரோஹித்தும் குஜராத் சென்றனர்.
பிங்க் அனார்கலி உடையில் தண்டியா குச்சிகளைப் பிடித்திருந்த பிரியங்கா தனது உற்சாகத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். “அகமதாபாத்தின் தண்டியா இரவு மிகவும் உற்சாகமாக இருக்கிறது” என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
”தி ஸ்கை இஸ் பிங்க்” படத்திற்கான முதல் சுற்று ஆடிஷன்களை முடித்த பின்னர் பிரியங்கா மற்றும் ஃபர்ஹான் தனது பெற்றோர்களாக நடிக்கிறார்கள் என்பதை ரோஹித் அறிந்து கொண்டார். இந்த படத்தில் ரோஹித்தின் சகோதரியாக ஜைரா வாசிம் நடித்துள்ளார்.

ஜைராவுடன் எளிதாக பழகிய ரோஹித்துக்கு, பிரியங்கா மற்றும் ஃபர்ஹானுடன் பழக நேரம் பிடித்தது என்கிறார். “நான் அவர்கள் மிகப்பெரிய நட்சத்திரம் என்ற கண்ணோட்டத்திலும், அத்தகைய சிறந்த நடிகர்கள், என்னுடன் பேச மாட்டார்கள் என்ற எண்ணத்திலும் தான் நான் வந்தேன். ஆனால் என் பின்னணி, எனக்குப் பிடித்த மற்றும் நடிக்க விரும்பும் படங்கள் பற்றி பிரியங்கா என்னிடம் பேச ஆரம்பித்தார். நாங்கள் ஒருவருக்கொருவர் திரைப்படங்களைப் பற்றி பேசினோம். அது எங்களுக்கு இடையேயான பனியை உடைத்து, உணர்வுப் பூர்வமாக எங்களை இணைத்தது” என்றார் ரோஹித்.