நடிகை பிரியங்கா சோப்ரா மற்றும் பாப் பாடகர் நிக் ஜோனாஸ் நிச்சயதார்த்த கொண்டாட்டம் மும்பையில் களைக்கட்ட தொடங்கியுள்ளது.
பிரியங்கா சோப்ரா நிச்சயதார்த்தம் :
தமிழில் விஜய்யுடன் ’தமிழன்’ படத்தில் அறிமுகமான பிரியங்கா சோப்ரா பாலிவுட் பக்கம் சென்றார். பாலிவுட்டில் மாபெரும் வெற்றியை பதித்து விட்டு , சில காலம் ஹாலிவுட்டில் தலைக்காட்டவும் சென்றார். ஹாலிவுர் சீரியஸ், நிகழ்ச்சி தொகுப்பாளர் என கலக்கிக் கொண்டிருக்கும் பிரியங்கா சோப்ராவும் பாப் பாடகர் நிக் ஜோனஸுக்கும் காதல் மலர்ந்தது.
நிக் ஜோனாஸ், பிரியங்கா சோப்ராவை விட 11 வயது இளையவர் என்பதால் இவர்களின் காதல் விவகாரம் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானது. இருவரும் லாஸ் ஏஞ்சல்ஸ், நியூயார்க் நகரங்களில் இருவரும் ஜோடியாக சுற்றும் படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகின.
இருப்பினும், இருவரும் தங்களது காதல் விவகாரத்தை வெளி உலகத்திற்கு தங்களது காதல் கல்யாணம் குறித்த கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் மறுத்து வந்தனர். இந்நிலையில் இருவரின் காதலுக்கும் அவர்களின் குடும்பத்தார் பச்சை கொடி காட்டினர்.
கடந்த மாதம் பிரியங்கா சோப்ரா - நிக் ஜோனாஸ் நிச்சயதார்த்தம் நடைப்பெற்றதாகவும், அப்போது பிரியங்காவுக்கு, நிக் 2 லட்ச அமெரிக்க டாலர் மதிப்பிலான வைர மோதிரம் பரிசளித்ததாகவும் தகவல் வெளியானது.
இந்த மோதிரத்தை தான் பிரியங்கா சோப்ரா செய்தியாளர்களிடம் இருந்து மறைத்தார். அந்த வீடியோவும் இணையத்தில் வெளியாகி வைரலானது. இந்நிலையில் இன்று(18.8.18) மாலை மும்பையில் உள்ள பிரியங்கா சோப்ராவின் இல்லத்தில் நிச்சயார்த்த பார்ட்டி நடைபெறுகிறது.
இதற்காக தனது குடும்பத்துடன் நேற்றிரவு மும்பை வந்த மாப்பிள்ளை மற்றும் அவரது குடும்பத்தினரை, பிரியங்கா சோப்ரா தனது குடும்பத்துடன் சென்று வரவேற்றார். இந்த நிச்சயதார்த்த பார்ட்டில் கலந்துக் கொள்ள குறிப்பிட்ட பாலிவுட் பிரபலங்கள் மற்றும் நண்பர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த பார்ட்டிக்கு வரும் விருந்தினர்கள் தங்க மும்பை புறநகர் பகுதியில் உள்ள ஸ்டார் ஹோட்டலில் விருந்தினர்களுக்காக 200 அறைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.
தொழிலதிபர் முகேஷ் அம்பானியும் பிரியங்கா-நிக் நிச்சயதார்த்த பார்ட்டி நிகழ்ச்சியில் பங்ககேற்கவுள்ளார் என கூறப்படுகிறது. முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானி நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் பிரியங்காவும் நிக்கும் ஜடியாக கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.