/tamil-ie/media/media_files/uploads/2019/09/priyanka-chopra.jpg)
priyanka chopra jonas
Priyanka Chopra: பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா இந்தியில் அனைத்து முன்னணி நட்சத்திரங்களுக்கும் ஜோடியாக நடித்து விட்டார். அதோடு பல ஹாலிவுட் திரைப்படங்களிலும், ’குவாண்டிகோ’ என்ற ஹாலிவுட் தொடரிலும் நடித்துள்ளார். சமீபத்தில் ‘தி ஸ்கை இஸ் பிங்க்’ என்ற படத்தில் ஃபர்ஹான் அக்தருடன் இணைந்து நடித்திருந்தார்.
இன்ஸ்டாகிராம், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் படு ஆக்டிவாக இருக்கும் பிரியங்கா, அவப்போது சில சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார். சமீபத்தில் டெல்லியில் புகை, மாசு குறித்து சமூக வலைதளத்தில் விமர்சித்திருந்தார் இந்த பாலிவுட் ஹாட்ஸ்டார். ”டெல்லி பற்றி ட்வீட் செய்வதை விட நீங்கள் முதலில் புகைபிடிப்பதை நிறுத்துங்கள்” என நெட்டிசன்கள் அவரை ட்ரோல் செய்திருந்தனர். இப்போது அவர் தனது மற்றொரு இன்ஸ்டாகிராம் பதிவால் மீண்டும், சிக்கலில் மாட்டியுள்ளார்.
சமீபத்தில் ஐஸ்கிரீமின் புகைப்படத்தை பிரியங்கா சோப்ரா இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருந்தார். அதில் ஐஸ்கிரீமை சுற்றி 500 ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. இதனைப் பார்த்த நெட்டிசன்கள் தவறான கருத்துக்களை வெளியிடத் தொடங்கினர். பொருளாதாரம் சரிந்து வரும் நிலையில், பணத்தை இப்படி வீணாக்க வேண்டாம் என பிரியங்காவுக்கு அறிவுரைகளும் வேகமெடுத்தன. அந்த ரூபாய் நோட்டுகள் போலியானவை என சில ரசிகர்களிடமிருந்து கமெண்டுகளும் வந்தன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.