/tamil-ie/media/media_files/uploads/2019/11/Priyanka-Chopra.jpg)
Priyanka Chopra
Priyanka Chopra : அமெரிக்க ஏஜென்சி நடத்திய ஆய்வில், உலகிலேயே அதிகம் தேடப்பட்ட இந்திய பிரபலங்களில் பிரியங்கா சோப்ராவும், அவரைத் தொடர்ந்து சல்மான் கானும் இடம் பெற்றிருப்பது தெரிய வந்திருக்கிறது.
அதன்படி அக்டோபர் 2019-ல் பிரியங்காவை 2.74 மில்லியன் முறை இணையத்தில் தேடியிருப்பதாகவும் அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. உலகளாவிய ஐகான் என்று கூறப்படும் பிரியங்கா, மாதாந்திர தேடலில் 4.2 மில்லியனுக்கும் அதிகமாகக் கொண்டுள்ளார். சல்மானுக்கு இதில் 2 மில்லியனுக்கும் அதிகமான தேடல்கள் உள்ளன. இந்த ஆய்வில் இந்திய நடிகர்கள் மற்றும் நடிகைகள் என இரண்டு பிரிவுகள் உள்ளன. பிரிவுகளின் படி தனித்தனியாக கருத்தில் கொண்டால், நடிகர்கள் சல்மான், அம்ரிஷ் பூரி மற்றும் ஷாருக்கான் முதல் 3 இடத்தைப் பெற்றுள்ளார்கள்.
அக்டோபர் 2019-ல், பிரியங்கா மற்றும் சல்மான் முறையே 2.74 மற்றும் 1.83 மில்லியன் முறை தேடப்பட்டுள்ளனர். அதிக தேடல்களாக டிசம்பர் 2018-ல் அதாவது பாடகர் நிக் ஜோனாஸை மணந்த போது, 13.6 மில்லியன் முறை தேடப்பட்டிருக்கிறார் பிரியங்கா.
தவிர, சன்னி லியோன் மற்றும் தீபிகா படுகோனேவும் அதிகம் தேடப்பட்ட நடிகைகளின் பட்டியலில் உள்ளனர். அவர்கள் முறையே 3 மில்லியன் மற்றும் 1.8 மில்லியன் முறை தேடல் அளவைக் கொண்டுள்ளனர். மூத்த நடிகை மதுபாலா 1.3 மில்லியன் மாதாந்திர தேடல்களுடன் ஆறாவது இடத்தைப் பெற்றுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.