scorecardresearch

பிரியங்கா சோப்ரா – நிக் ஜோனாஸின் ’குக்கீஸ்’ கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

Priyanka Chopra – Nick Jonas: இந்தாண்டு முழுவதும் படு பிஸியாக இருந்தது இந்த ஜோடி.

Priyanka Chopra Nick Jonas
Priyanka Chopra Nick Jonas

Priyanka Chopra – Nick Jonas Celebrates their Christmas :  பிரியங்கா சோப்ரா ஜோனாஸ் தனது கணவர் நிக் ஜோனாஸுடன் இந்த கிறிஸ்துமஸைக் கொண்டாடினார். இந்தாண்டு முழுவதும் படு பிஸியாக இருந்தது இந்த ஜோடி. ’தி ஸ்கை இஸ் பிங்க் மற்றும் வரவிருக்கும் படங்களின் படப்பிடிப்பில் பிஸியாக இருந்தார் பிரியங்கா, நிக் ஜோனாஸோ தனது சகோதரர்கள் ஜோய் ஜோனாஸ், மற்றும் கெவின் ஜோனாஸ் ஆகியோருடன் 2019-ன் பிற்பகுதியில் இணைந்து, மீண்டும் ஜோனாஸ் பிரதர்ஸாக வேலைகளில் ஈடுபட்டார்.

பிரியங்கா சோப்ரா திருமணத்தின் மூலம் 3 மாத வருவாயை ஈட்டிய ஹோட்டல்!

’மிட்வே’ மற்றும் ’ஜுமன்ஜி: தி நெக்ஸ்ட் லெவல்’ என இரு படங்கள், நிக் ஜோனாஸுக்கு வெளியாகின. இந்நிலையில் தங்களின் பிஸியான கால அட்டவணையை ஒதுக்கி வைத்துவிட்டு, பிரியங்காவும், நிக்கும் கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒன்றாக கொண்டாடினார்கள். அதில் சந்தோஷமும், கேளிக்கைகளும் நிறைந்திருந்தன.

 

View this post on Instagram

 

Merry Christmas Eve y’all! ????

A post shared by Nick Jonas (@nickjonas) on

ஆசியாவின் கவர்ச்சியான பெண்: முதலிடத்தில் ஆலியா, 10-ம் இடத்தில் பிரியங்கா சோப்ரா

இந்த ஜோடியின் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட காட்சியை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார் நிக். பிரியங்கா – நிக் இருவருமே கறுப்பு நிறத்தில் உடை அணிந்துள்ள அந்த வீடியோவில், சில குக்கீகளை அலங்கரிப்பதைக் காணலாம். பிரியங்கா நிஞ்சா குக்கீயை அலங்கரிப்பதாக வீடியோவில் கூறுகிறார். கடந்த வருடம் இவர்களின் முதல் கிறிஸ்துமஸ் தினத்தை செல்லப் பிராணியான நாயுடன் கொண்டாடியது குறிப்பிடத்தக்கது.

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Priyanka chopra nick jonas celebrates their christmas