/tamil-ie/media/media_files/uploads/2019/05/MET-gala-2019-Priyanka-Chopra.jpg)
Priyanka Chopra gets Trolled: ஒவ்வொரு வருடமும் மே மாதத்தின் முதல் திங்களில் ’மெட் காலா ஃபேஷன்’ நிகழ்ச்சி நடைபெறும்.
இதில் ஹாலிவுட் மற்றும் பாலிவுட் நட்சத்திரங்கள், பாடகர்கள், ஃபேஷன் டிஸைனர்கள் என அனைவரும் கலந்துக் கொள்வார்கள்.
இதில் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தனது கணவர் நிக் ஜோனஸுடன் கலந்துக் கொண்டார். இவர்கள் இருவரும் கடந்த 2017-ம் ஆண்டு காதல் ஜோடிகளாகக் கலந்துக் கொண்டனர். தற்போது காதல் தம்பதியாக பங்கெடுத்திருக்கிறார்கள்.
’Camp: நோட்ஸ் ஆன் பேஷன்’ என்ற தீம் இவ்வருட மெட் காலாவின் தீமாக அறிவிக்கப்பட்டது. இதில் ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு பிரியங்கா இருந்தது தான் தற்போதைய ஹாட் டாக்.
எப்போதும் வித்தியாசமான ஃபேஷன் முயற்சிகளில் இறங்கி, ஸ்டைலிஷாக வலம் வரும் பிரியங்காவுக்கு இந்த முறை என்னவாயிற்று என அவரின் ரசிகர்கள் புலம்பி வருகிறார்கள்.
மற்றவர்கள் சமூக வலைதளத்தில் ட்ரோல் செய்து வருகிறார்கள். குறிப்பாக அவரின் ஹேர் ஸ்டைல் மற்றும், கண் ஒப்பனை ஆகியவை அதிக ட்ரோலுக்கு இடம் கொடுத்திருக்கிறது.
கடந்த வருடம் கூட சிறந்த உடை மற்றும் ஒப்பனைக்கு ’மெட் காலா’ நிகழ்ச்சியில் பரிசு வாங்கினார் பிரியங்கா. அதேபோல் இந்த அர்ப்பணிப்புக்காகவே இவ்வாண்டும் பரிசுகளை அள்ளுவார் என்கிறார்கள் சிலர்.
இதில் பிங்க் நிற பார்பி டாலாக உடை அணிந்து வந்த தீபிகா படுகோன், ரசிகர்களைக் கவர்ந்தது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.