இதற்கிடையே, நிக்கின் ராக் இசைக்குழு, ஜோ ஜோனாஸ் மற்றும் கெவின் ஜோனாஸ் ஆகியோரை உள்ளடக்கியதால், ஜோனாஸ் பிரதர்ஸ் பேண்ட் என்று அழைக்கப்படுகிறது. இவர்கள் சிறந்த பாப் இசை / சிறந்த குழு ஆகிய கேட்டகரியில் 62-வது கிராமி விருதுக்கு நாமினேட் செய்யப்பட்டிருக்கிறார்கள்.
ஜோனாஸ் பிரதர்ஸ் கிராமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டதும், பிரியங்கா சோப்ராவால் சந்தோஷத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. ”உங்களை நினைத்து மிகவும் பெருமைப் படுகிறேன்” என நிக் அவரது சகோதரர்களை ட்விட்டரில் வாழ்த்தியுள்ளார்.
பல ஆண்டுகளாக ஒன்றாக பணியாற்றிய ஜோனாஸ் பிரதர்ஸ் 2013-ல் பிரிந்தனர். அவர்கள் 2019-ல் மீண்டும் ஒன்றிணைந்து ‘சக்கர் ஆல்பத்தில்’ பணியாற்றினார்கள். கிராமி விருதுக்கு பரிந்துரைப்பட்டுள்ள இந்தப் பாடலில் ஜோனஸ் பிரதர்ஸின் மனைவிகளும் இடம்பெற்றிருந்தனர். ”என்னையும் என் சகோதரர்களையும் மாற்றிய பாடலுக்கான கிராமி பரிந்துரை மகிழ்ச்சியளிக்கிறது. எங்களை ஊக்கப்படுத்தும் ஒவ்வொருவருக்கும் நன்றி” என இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார் நிக் ஜோனாஸ்.