பாலிவுட்டின் உச்ச நடிகைகள் 3 பேர் கடந்தாண்டு திருமணம் செய்துக் கொண்டார்கள்.
சோனம் கபூர் - ஆனந்த் அஹுஜா, தீபிகா படுகோன் - ரன்வீர் சிங், பிரியங்கா சோப்ரா - நிக் ஜோனஸ், ஆகியோர் கடந்தாண்டு மண வாழ்க்கையில் காலடி எடுத்து வைத்தனர்.
இதில் பிரியங்கா சோப்ரா திருமண செய்தி அரசல் புரசலாக வெளியானபோதே விமர்சனமும் வெடித்தது. காரணம், தன்னை விட 10 வயது குறைந்த அமெரிக்கப் பாடகர் நிக் ஜோனஸை அவர் திருமணம் செய்துக் கொள்ளும் விஷயம் ட்ரோலுக்கு இடம் கொடுத்தது. இறுதியாக அவர் அதிகாரப்பூர்வமாக தனது திருமணத்தை அறிவித்ததும், ரசிகர்கள் வாயடைத்துப் போனார்கள்.
மிக சமீபமாக கடந்த டிசம்பரில் தான் பிரியங்கா சோப்ரா - நிக் ஜோனஸ் திருமணம் ஜோத்பூரில் நடந்தது. இந்நிலையில் இவர்கள் விவாகரத்து செய்துக் கொள்ள முடிவெடுத்திருப்பதாக அமெரிக்கப் பத்திரிக்கையான ‘ஓகே’ செய்தி வெளியிட்டுள்ளது.
இருவருக்கும், அவர்களின் குடும்பத்துக்கும் ஒத்துப் போகவில்லை. பிரியங்காவும் நிக்கும் தினமும் சண்டையிட்டுக் கொள்கிறார்கள். பிரியங்கா மிகவும் கூலானா ஈஸி கோயிங் டைப் ஆள் என முன்பு நிக் நினைத்திருந்தாராம். ஆனால் பிரியங்காவோ நிக்கை, தனக்கு கட்டுப்பட்டு நடக்க சொல்கிறாராம். இதனால் இருவருக்கும் அடிக்கடி கருத்து மோதல்கள் வந்து போகிறதாம்.
பிரியங்கா பக்குவப்பட்டவராக இருப்பார். திருமணம் முடிந்ததும் குழந்தை, குடும்பம் என செட்டில் ஆகிவிடுவார் என நிக் ஜோனஸின் குடும்பத்தினர் முன்பு நினைத்தார்களாம். ஆனால் பிரியங்காவோ இன்னும் 21 வயது பெண் போல பார்ட்டி லவ்வராக இருப்பதை கொஞ்சமும் அவர்கள் ரசிக்கவில்லையாம். அதனால் புதுமணத் தம்பதி இருவரும் விவாகரத்து செய்துக் கொள்ள முடிவெடுத்திருக்கிறார்களாம்.
மேற்கூறியுள்ள இந்த செய்தியை ஓகே பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. இந்த விஷயங்கள் உண்மையா அல்லது, கிசுகிசுவா என்பதை அவர்கள் விரைவில் உறுதிப்படுத்துவார்கள் என எதிர் பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே நிக்குடன் அன்யோன்யமாக இருக்கும் படத்தை இன்று கூட இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருக்கிறார் பிரியங்கா!