பிரியங்கா சோப்ரா திருமணத்தின் மூலம் 3 மாத வருவாயை ஈட்டிய ஹோட்டல்!

பிரியங்கா - ஜோனஸ் தம்பதியினர் திருமணம் நடைபெற்ற இடத்திற்கு மட்டும் 461,000 டாலர்களை செலவிட்டதாக தெரிகிறது.

பிரியங்கா - ஜோனஸ் தம்பதியினர் திருமணம் நடைபெற்ற இடத்திற்கு மட்டும் 461,000 டாலர்களை செலவிட்டதாக தெரிகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Priyanka Chopra - Nick Jonas wedding, பிரியங்கா சோப்ரா

Priyanka Chopra - Nick Jonas wedding, பிரியங்கா சோப்ரா

Priyanka Chopra - Nick Jonas Wedding : ஜோத்பூரில் உள்ள ஒரு ஹோட்டலில் நடிகை பிரியங்கா சோப்ராவின் திருமணம் கடந்தாண்டு நடந்தது. இந்தத் திருமணத்தால் மூன்று மாதங்களுக்கு வருவாய் பற்றாக்குறை இல்லாமல் இருந்ததாக இந்தியன் ஹோட்டலின் உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.

சி.ஏ.ஏ-க்கு எதிராக தமிழகம் முழுவதும் வலுக்கும் போராட்டம்...

Advertisment

உமைத் பவன் பேலஸை இயக்கும் இந்தியன் ஹோட்டல்ஸ் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும் நிர்வாக இயக்குநருமான புனீத் சத்வால் தான் இவ்வாறு கூறியிருக்கிறார். அழகியாக இருந்து நடிகையான சோப்ரா, கடந்தாண்டு டிசம்பர் மாதம் அமெரிக்க பாடகர்-பாடலாசிரியர் நிக் ஜோனாஸை மணந்தார். "கடந்தாண்டு, உமைத் பவன் பேலஸில் பிரியங்கா சோப்ராவின் திருமணம் நடந்தது. அது 3 மாத வருவாயை மொத்தமாக பெற்றுத் தந்தது” என முன்னணி வர்த்தக நாளிதழுக்கு பேட்டியளித்த புனீத் குறிப்பிட்டுள்ளார்.

திருமணத்தைத் தொடர்ந்து ஊடகங்களில் வெளியான தகவல்களின்படி, பிரியங்கா - ஜோனஸ் தம்பதியினர் திருமணம் நடைபெற்ற இடத்திற்கு மட்டும் 461,000 டாலர்களை செலவிட்டதாக தெரிகிறது. அதில் விருந்தினர்களுக்காக அறை புக் செய்த செலவும் அடங்கும். அதே வேளையில், இஷா அம்பானி-ஆனந்த் பிரமல் திருமணமும் நிறைய பிராண்டுகளுக்கு உதவியிருக்கும் என்றும் சத்வால் கூறினார்.

Advertisment
Advertisements

இதற்கிடையே சில வாரங்களுக்கு முன்னர் பிரியங்கா - நிக் ஜோனஸ் ஜோடி தங்களது முதல் திருமண நாளை கொண்டாடியது குறிப்பிடத்தக்கது.

Priyanka Chopra

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: