/tamil-ie/media/media_files/uploads/2018/12/Priyanka-Chopra-Nicky-Jonas-wedding-6.jpg)
Priyanka Chopra - Nick Jonas wedding, பிரியங்கா சோப்ரா
பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா- நிக் ஜோனஸ் காதல் திருமணம் ஜோத்பூர் அரண்மனையில் நேற்று பிரமாண்டமாக நடந்தது. இந்து சடங்குகளின் படி இன்று மீண்டும் திருமணம்.
பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, குவாண்டிகோ என்ற அமெரிக்க டி.வி சீரியல் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானார். பிரியங்கா – நிக் ஜோனஸ் திருமணம் நேற்று ஜோத்பூர் அரண்மனையில் பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது. பிரபல பாப் பாடகர் நிக் ஜோனஸ், பிரியங்கா சோப்ராவை விட 10 வயது இளையவர் என்பதால் இவர்களின் காதல் விவகாரம் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானது. இருந்த போது இவர்களது காதல் தற்போது திருமணத்தில் முடிந்துள்ளது.
பிரியங்கா சோப்ரா - நிக் ஜோனஸ் திருமணம்
ஆகஸ்ட் மாதம் நடைப்பெற்ற இவர்களின் நிச்சயதார்த்த பார்ட்டியில் நிக் ஜோனாஸ், பிரியங்காவுக்கு 2 கோடி மதிப்பிலான வைர மோதிரத்தை பரிசாக வழங்கினார் நிக். அதனைத்தொடர்ந்து பிரியங்கா திருமணத்திற்கு மட்டும் 10 கோடி வரை ஷாப்பிங் செய்தார் பிரியங்கா என்ற தகவல்கள் காற்றி வேகமாக பரவியது.
இதையடுத்து, நேற்று கிரிஸ்தவ முறைப்படி இவர்களின் திருமணம் நடந்து முடிந்தது. இதனை தொடர்ந்து இன்று இந்து முறைப்படி மீண்டும் திருமணம் நடைபெறுகிறது. இவர்களின் திருமண புகைப்படங்கள் இன்னும் இன்னும் வெளிவராத நிலையில், மெகந்தி நிகழ்ச்சியின் புகைப்படங்களை மட்டும் பிரியங்கா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.