"விஜய் தான் என் மகளின் முதல் வழிகாட்டி": 'தமிழன்' படம் குறித்து நினைவுகூர்ந்த பிரியங்கா சோப்ராவின் தாயார்

'தமிழன்' திரைப்படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமான நடிகை பிரியங்கா சோப்ராவின் அனுபவங்கள் குறித்து அவரது தாயார் மது சோப்ரா பல்வேறு தகவல்களை நினைவு கூர்ந்தார்.

'தமிழன்' திரைப்படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமான நடிகை பிரியங்கா சோப்ராவின் அனுபவங்கள் குறித்து அவரது தாயார் மது சோப்ரா பல்வேறு தகவல்களை நினைவு கூர்ந்தார்.

author-image
WebDesk
New Update
Vijay and priyanka

தனது சொந்த ஊரான உத்திர பிரதேசத்தின் பரேலி குறித்து பிரியங்கா சோப்ரா அடிக்கடி கூறினாலும், அவருக்கு சினிமா துறையில் பல்வேறு வாய்ப்புகளை வழங்கியது மும்பை தான். இந்த சூழலில் பிரியங்காவின் ஆரம்ப கால சினிமா பயணம் குறித்து, அவரது தாயாரான மது சோப்ரா பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார். குறிப்பாக, தமன்னா தத், நடிகர் விஜய் குறித்து பல்வேறு விஷயங்களை அவர் கூறினார்.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்கவும்: ‘Priyanka Chopra was intimidated by Thalapathy Vijay during Thamizhan,’ recalls mom Madhu: ‘I was nervous, how a young girl would act with a star’

தமிழில் கடந்த 2002-ஆம் ஆண்டு வெளியான 'தமிழன்' திரைப்படம் தான், பிரியங்கா சோப்ராவின் முதல் திரைப்படம். இப்படத்தில் அவர் விஜய்யுடன் இணைந்து நடித்திருப்பார். அப்போது, 19 வயதே நிரம்பிய பிரியங்கா சோப்ராவிற்கு விஜய் நம்பிக்கை அளித்ததாக மது சோப்ரா கூறினார். "விஜய் மிகவும் நல்ல மனிதர். ஆரம்பத்தில் விஜய் குறித்து பயத்துடன் பிரியங்கா சோப்ரா இருந்தார். இவ்வளவு சிறிய பெண், அவ்வளவு பெரிய நட்சத்திரத்துடன் இணைந்து எப்படி நடிக்க முடியும் என்று நானும் பயந்தேன். ஆனால், விஜய் மிகவும் அன்பாக நடந்து கொண்டார். விஜய் தான் பிரியங்கா சோப்ராவின் முதல் வழிகாட்டி. அவள் தன் நம்பிக்கையை இழக்க, விஜய் ஒரு போதும் அனுமதிக்கவில்லை" என மது சோப்ரா தெரிவித்தார்.

மேலும், "விஜய் சிறப்பாக நடனம் ஆடுவார். பிரபுதேவாவின் சகோதரர் ராஜு சுந்தரம் அப்படத்திற்கு நடனம் அமைத்தார். அதனால், நடனம் மிகவும் கடினமாக இருந்தது. எனினும், பிரியங்கா சோப்ராவை அவர்கள் நன்றாக கவனித்துக் கொண்டனர்" என்று அவர் கூறினார்.

Advertisment
Advertisements

அழகிப் போட்டியில் வெற்றி பெற்ற பின்னர், மும்பையில் தங்கள் ஆரம்ப நாட்கள் குறித்து மது சோப்ரா நினைவு கூர்ந்தார். குறிப்பாக, மும்பையின் கண்டிவாலி பகுதியில் வசித்த தங்கள் உறவினர்களுடன் குடியிருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். "முதலில், ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குப் பயணம் செய்வது கடினமாக இருந்தது. வீடு திரும்பியதும் எங்கள் காரை பயன்படுத்தினோம். ஆனால், மும்பையில் உள்ளூர் ரயிலில் செல்ல வேண்டியிருந்தது. அது சிரமமாக இருந்தது. நாங்கள் கண்டிவாலியில் இருந்து காலை 5.30 மணிக்குப் புறப்பட்டு, 6.30 மணிக்கு பயிற்சியாளர் மிக்கி மேத்தாவை அடைவோம்" எனத் தெரிவித்துள்ளார்.

மற்ற பெரிய நகரங்களைப் போல மும்பை பயமாக இல்லை என்று மது குறிப்பிட்டார். ஏனெனில், அவர்கள் இரவில் தாமதமாக வெளியே சென்றாலும் எளிதாக அச்சமின்றி வீட்டிற்கு ஒரு டாக்ஸியை எடுத்துக் கொள்ளலாம். "பின்னர் சாண்டாக்ரூஸில் உள்ள விடுதிக்கு நாங்கள் மாறினோம். அதுவும் நன்றாக இருந்தது. அங்கு தான் தமன்னா தத்தை, பிரியங்கா சோப்ரா சந்தித்தார். அப்போதில் இருந்து இருவரும் நண்பர்களாகினர். நாங்கள் எதற்கும் அஞ்ச வேண்டியதில்லை, பெரிய இழப்புகளையும் சந்திக்கவில்லை. சவால்கள் வந்தாலும், அவற்றை எப்படிக் கையாள்வது என்பது பிரியங்காவிற்கு தெரியும்" என் மதுசோப்ரா கூறினார்.

Vijay Priyanka Chopra

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: