scorecardresearch

ரொம்ப ஸ்லிம் ஆனா ரசிகர்களுக்கு புடிக்காதே… பிரியங்காவுக்கு என்ன ஆச்சு?

தொகுப்பாளினி பிரியங்கா பெரிய அளவில் உடல் எடையைக் குறைத்து ஸ்லிம் ஆகி, மாடர்ன் உடையில் அழகான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அவருடைய புகைப்படங்கள் குறித்து ரசிகர்கள் கம்மெண்ட் செய்து வருகின்றனர்.

priyanka deshpande, priyanka, priyanka deshpande salary, priyanka deshpande daughter name, பிரியங்கா, விஜய் டிவி பிரியங்கா, சூப்பர் சிங்கர் பிரியங்கா, பிரியங்கா வைரல் போட்டோ, priyanka deshpande baby name priyanka deshpande mother tongue, priyanka deshpande age 2021, priyanka deshpande health

விஜய் டிவியின் முன்னணி தொகுப்பாளினியாக வலம் வரும் பிரியங்காவுக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். பிரியங்கா தொகுத்து வழங்கும் சூப்பர் சிங்கர் சீனியர், சூப்பர் சிங்கர் ஜூனியர் போன்ற நிகழ்ச்சிகளை அவருடைய நகைச்சுவைக்காகவும் அவருடைய கொஞ்சம் பூசிய குண்டான தோற்றத்துக்காகவுமே நிறைய பேர் பார்த்து வருகிறார்கள்.

தொலைக்காட்சிகளில், சினிமாக்களில் பிரபலமான பலரும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்று அங்கே அவர்களின் இமேஜ் சேதாரம் ஆகி சறுக்கலை சந்தித்தவர்கள் பலர். ஆனால், பிரியங்கா பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று இரண்டாவது இடத்தைப் பிடித்து அனைவரின் மனதையும் வென்று இமேஜ் டேமேஜ் இல்லாமல் திரும்பினார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகு, பிரியங்கா தொடர்ந்து விஜய் டிவிகளில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிகளில் மீண்டும் அதே உற்சாகத்துடன், அதே நகைச்சுவையுடன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

பொதுவாக ஒல்லியான தோற்றம் கொண்ட நிகழ்ச்சி தொகுப்பாளினிகள்தான் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இருக்கும் என்ற மாயைகளை உடைத்தவர். தனது பூசிய தோற்றத்தையும் தான் ஒரு உணவு பிரியை என்பதையும் ஜாலியாக சொல்பவர் பிரியங்கா. அதனாலேயே, கொஞ்சம் குண்டான பிரியங்காவை எல்லோருக்கும் பிடித்துப் போனது.

இந்த சூழலில்தான், தொகுப்பாளினி பிரியங்கா பெரிய அளவில் உடல் எடையைக் குறைத்து ஸ்லிம் ஆகி, மாடர்ன் உடையில் அழகான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். ஆனால், பிரியங்கா ரொம்ப ஒல்லியான ரசிகர்களுக்கு பிடிக்காதே என்ன ஆச்சு பிரியங்காவுக்கு என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனாலும், இந்த ஸ்லிம்மான தோற்றத்திலும் அதே சிரிப்புடன் இருக்கிறார் பிரியங்கா. இன்ஸ்டாகிராமில் பிரியங்கா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Priyanka deshpande becomes slim beautiful photos goes viral