Priyanka Deshpande Youtube Success Story Pugazh Tamil News : தொலைக்காட்சியைவிட தற்போது மொபைல்களின் தேவைதான் அதிகரித்து வருகிறது. ஒரு ஸ்மார்ட்போன் அதனோடு இணையம் இருந்தால் போதும், உலகமே நம் கைகளில்தான் உள்ளது என்கிற ரேஞ்சில் சுற்றிக்கொண்டிருப்பவர்கள் அதிகம். ஒருவகையில் அதுவும் உண்மைதான். எதைப்பற்றி வேண்டுமானாலும் நொடியில் தெரிந்துகொள்ள மொபைல் போதுமே! அதிலும் தற்போதைய இளைஞர்களின் சாய்ஸ், யூடியூப். பார்க்க மட்டுமல்ல, தங்களுக்குத் தெரிந்த விஷயங்கள் மற்றும் தங்களுடைய திறமையைப் பதிவு செய்து, வெளியிட்டு அதன்மூலம் வருமானத்தையும் ஈட்டி வருகின்றனர் மக்கள்.

இது சாமானிய மக்களோடு நின்றுவிடவில்லை. ஏற்கெனவே லைம்லைட்டில் இருக்கும் பிரபலங்களும் தற்போது தங்களுக்கென்று தனிப்பட்ட வகையில் யூடியூப் சேனலை ஆரம்பித்து, அதன்மூலம் மேலும் ரசிகர்களையும் வருமானத்தையும் பெற்று வருகின்றனர். அந்த வரிசையில் விஜய் டிவி புகழ் பிரியங்கா தேஷ்பாண்டே முதல் இடத்தில் இருக்கிறார்.
தொகுப்பாளினியாகப் பல ரசிகர்களைக் கொண்டிருந்த பிரியங்கா, தற்போது யூடியூப் மில்லியன் கணக்கான ரசிகர்களைப் பெற்றிருக்கிறார். ஆம், 1.05 மில்லியன் மக்கள் இவருடைய யூடியூப் சேனலை பின்பற்றுகின்றனர். இது இன்றைய எண்ணிக்கை மட்டுமே. சுமார் 10 மாதங்களுக்கு முன்பு தொடங்கிய இந்த சேனலில் அவருடைய தினசரி வாழ்க்கைமுறை, சமையல், அழகுக் குறிப்புக்கள், வீட்டில் நடைபெறும் விழாக்கள், பயண வீடியோக்கள் ஆகியவை அடங்கும்.

பெரும்பாலும் இவருடைய வீடியோக்கள் மில்லியன் வியூஸ்களையே பெரும். அந்த வரிசையில் ‘குக் வித் கோமாளி’ பிரபலம் புகழுடன் இணைந்து ‘சோ சோக்கு..’ எனும் ஆல்பம் பாடல்தான் மெகாஹிட். தற்போது வியூஸ், 5.1 மில்லியன். இதற்கு முக்கிய காரணம் புகழ் என்றும் சொல்லலாம். அதற்கு சாட்சி இந்த காணொளிக்குக் கீழே இருக்கும் கமென்ட்டுகள்தான்.
பிரியங்காவின் நகைச்சுவைக்காகவே ரசிகர்கள் கூடுகின்றனர். மிகக் குறைந்த நேரத்தில் மில்லியன் ரசிகர்களை பெற்றிருக்கும் இவருடைய வீடியோ, எப்படியும் ட்ரெண்டாகிவிடும். அதாவது ட்ரெண்டிங்கில் காணப்படும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil