எத்திராஜ் மாணவி டூ காஸ்ட்லி தமிழ் ஆங்கர்… பிக்பாஸில் நுழையும் பிரியங்கா சக்சஸ் ஸ்டோரி

பிரியங்கா எத்திராஜ் கல்லூரி மாணவி டூ காஸ்ட்லி ஆங்கர் என்று வளர்ந்து தற்போது விஜய் டிவியில் பிரபலமான பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சிக்குள் நுழைந்து தனது பயணத்தை வெற்றிகரமாக தொடர்கிறார்.

Priyanka, Anchor Priyanka Deshpande, Anchor Priyanka success story, Anchor Priyanka enters into Bigg Boss 5 tamil, Bigg boss season 5, bigg boss, பிரியங்கா, தொகுப்பாளினி பிரியங்கா, விஜய் டிவி, பிக் பாஸ் சீசன் 5, , Vijay TV, Tamil news, Anchor Priyanka news, Ethiraj student to Bigg Boss contestant

தமிழ் தொலைக்காட்சிகளின் முன்னணி தொகுப்பாளர்களில் ஒருவரும் எத்திராஜ் கல்லூரியின் முன்னாள் மாணவியுமான பிரியங்கா விஜய் டிவியில் அக்டோபர் 3ம் தேதி ஒளிபரப்பாக உள்ள பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொள்ள உள்ளார். விஜய் டிவியின் டாப் தொகுப்பாளர் பிரியங்கா எத்திராஜ் கல்லூரி மாணவி டூ முன்னணி தமிழ் தொகுப்பாளரானது எப்படி இப்போது பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு செல்வது பற்றி அவருடைய சக்சஸ் ஸ்டோரியைக் காண்போம்.

விஜய் டிவியில் சூப்பர் சிங்கர், ஜூனியர் சூப்பர் சிங்கர், காமெடி ராஜா கலக்கல் ராணி, ஸ்டார் மியூஸிக் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளின் தொகுப்பாளராக ரசிகர்களின் மனம் கவர்ந்தவர் தொகுப்பாளினி பிரியங்கா. இவர் கர்நாடகாவைச் சேர்ந்தவர். மாகாராஷ்டிராவைப் பூர்வீகமாகக் கொண்ட அவரது பெற்றோர் முதலில் மகாராஷ்டிராவில் இருந்து கர்நாடகாவில் குடியேறியவர்கள். பிரியங்கா சென்னையில் உள்ள எத்திராஜ் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார்.

தொகுப்பாளினி பிரியங்கா, டேடி மை ஹீரோ போன்ற பல நிகழ்ச்சிகளை பிரியங்கா தொகுத்து வழங்கியுள்ளார். பின்னர், அவர் மாகாபா ஆனந்துடன் சினிமா காரம் காப்பி மற்றும் ஒல்லி பெல்லி ஆகிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

சூப்பர் சிங்கர் சீசன் 4 அவரை பார்வையாளர்கள் மத்தியில் மேலும் பிரபலமாக்கியது. பின்னர், அவர் சூப்பர் சிங்கர் மற்றும் கிங்ஸ் ஆஃப் காமெடி ஜூனியர்ஸ் உள்ளிட்ட நிகழ்ச்சிகளின் பிற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். இது தவிர, அவர் கலக்க போவது யாரு சீசன் 6 மற்றும் 7 இன் நடுவராகவும் இருந்தார். பிரியங்காவின் தொகுப்பாளர் பயணத்தில் அவர் பெரிய அளவில் பிரபலமடைந்ததால் தமிழ் தொலைக்காட்சியில் அதிக ஊதியம் பெறும் தொகுப்பாளராக ஆனார்.

இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், பிரியங்கா தற்செயலாகத்தான் தொகுப்பாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். அவருடைய நெருங்கிய நண்பர் ஒருவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்கு வராததால் அவர் தற்காலிகமாக சில நாட்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இறுதியில், அவர் ஒரு முழுநேர தொகுப்பாளராக ஆனார்.

பிரியங்கா ஒரு பிரபலமான யூடியூபர். அவர் அடிக்கடி தனது ரசிகர்களை ஈர்க்கும் வீடியோக்களைப் பதிவிட்டு மகிழ்விக்கிறார். அவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமான புகழ் உடன் ஒரு ஆல்பம் செய்துள்ளார்.
பிரியங்காவுக்கு ஆங்கிலம், தமிழ், இந்தி, கன்னடம் மற்றும் மராத்தி உட்பட 5 மொழிகள் தெரியும்.

பிரபல தொகுப்பாளினியாக உருவெடுத்த பிரியங்கா விஜய் டிவியில் பணிபுரியும் பிரவீன்குமாரை மணந்தார். இவர்களுடைய காதல் மற்றும் பெற்றோர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட திருமணம்.

இப்படி, பிரியங்கா எத்திராஜ் கல்லூரி மாணவி டூ காஸ்ட்லி ஆங்கர் என்று வளர்ந்து தற்போது விஜய் டிவியில் பிரபலமான பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சிக்குள் நுழைந்து தனது பயணத்தை வெற்றிகரமாக தொடர்கிறார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Priyanka enters into bigg boss from ethiraj college student to busy anchor success story

Next Story
இளம் சீரியல் நடிகை தற்கொலை ஏன்? 4 பக்க கடிதம் சிக்கியதுKannada Actress Soujanya Suicide Note found Tamil News
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com