சன் டிவி-யில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ரோஜா சீரியல் டிஆர்பி-இல் தொடர்ந்து முன்னிலையில் இருக்கிறது.
பல ஆண்டுகளாக காணாமல் போன ரோஜாவின் தாய் செண்பகம், மீண்டும் தன் குடும்பத்துடன் இணைந்துவிட்டார். தலையில் அடிபட்டு பழைய நியாபகங்கள் மீண்டும் வர, ரோஜா தான் தன்னுடைய உண்மையான மகள் என செண்பகம் தெரிந்துகொள்கிறாள்.
அதுவரை ரோஜா தன்னுடைய மகள் இல்லை என்று கூறிய அப்பா மாணிக்கம் , தன்னுடைய பேத்தி அனுதான் என எப்போதும் புலம்பி வந்த பாட்டி வடிவுக்கரசியும், ரோஜா தான் தங்களின் உண்மையான வாரிசு என ஏற்றுக் கொண்டனர். இதற்கு நடுவில், ஷாக்ஷியும், அனுவும் சேர்ந்து கொண்டு, ரோஜாவை பழி வாங்க பலத் திட்டங்களை தீட்டி, கடைசி அந்த வலையில் அவர்களே சிக்கிவிடுகின்றனர்.
இப்படி பல திருப்பங்களுடன் ரோஜா சீரியல் இப்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.
இதில் ரோஜாவாக நடிக்கும் பிரியங்கா நல்காரிக்கு தமிழகத்தில் ஒரு ரசிக பட்டாளமே இருக்கிறது. ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் பிறந்த பிரியங்கா, முதலில் தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகி, பின்னர் சீரியல்களில் நடித்தார். தற்போது, ரோஜா சீரியல் மூலம் தமிழகம் முழுவதுமுள்ள ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துவிட்டார்.
ரோஜா சீரியலில் துறுதுறு பொண்ணாக வரும் பிரியங்கா, நிஜ வாழ்க்கையிலும் அப்படித்தான். எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பதுடன், ரசிகர்களுடனும் அவ்வப்போது கலந்துரையாடுவார்.
ரோஜா சீரியலின் வில்லி அனு என்ற விஜே அக்ஷயா, இவருக்கு எப்போதும் ரோஜாவுடன் போட்டி போடுவது தான் வேலை. அவள் செண்பகத்தின் உண்மையான மகள் இல்லை. ஏமாற்றிக் கொண்டிருக்கிறார் என்பது வீட்டில் அனுவை தவிர அனைவருக்கும் தெரியும். ஆனால், நீதிமன்றத்தில் டிஎன்ஏ சோதனை தீர்ப்பு வந்த பிறகுதான் அவளை வீட்டை விட்டு வெளியே துரத்த வேண்டுமென அர்ஜூன் முனைப்புடன் இருக்கிறான்.
இப்படி சீரியலில் எலியும், பூனையுமாக வரும் அனுவும், ரோஜாவும் ரியல் வாழ்க்கையில் நல்ல தோழமையுடன் இருக்கின்றனர். இருவரும் ஒன்றாக சேர்ந்து இன்ஸ்டாவில், அடிக்கடி புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர். இதைப்பார்த்த ரசிகர்கள் இருவரையும், போட்டி பொறாமை இல்லாமல் உங்களை போலத்தான் அன்புடன் இருக்க வேண்டுமென வாழ்த்தி வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“