பிரியங்கா நல்கரி நடிக்கும் புதிய சீரியலின் ப்ரோமோ வெளியீடு
ரோஜா சீரியல் மூலமான பிரபலமான பிரியங்கா நல்கரி புதிய சீரியலில் நடித்து வருகிறார். இதற்கான ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது.
Advertisment
சன் டிவியில் ஒளிப்பரப்பாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற சீரியல் ரோஜா. டி.ஆர்.பி ரேட்டிங்கில் எப்போதும் முன்னிலையில் இருந்த இந்த சீரியலுக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்தனர்.
இந்த சீரியலில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் பிரியங்கா நல்கரி. அவர் இந்த சீரியலின் முதன்மை கதாப்பாத்திரமான ரோஜாவாக நடித்தார். ரோஜா சீரியலுக்குப் பிறகு பிரியங்கா ஜீ தமிழ் சேனலில் சீதாராமன் சீரியலில் நாயகியாக நடித்தார். சீதா ராமன் சீரியலும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இருப்பினும் அந்த சீரியலில் இருந்து திடீரென விலகுவதாக அறிவித்தார். பிரியங்கா தனது காதலரைத் திருமணம் செய்துக் கொண்டு வெளிநாடு சென்றுவிட்டதால், சீரியல்களில் நடிக்கமாட்டார் எனக் கூறப்பட்டது.
இந்த நிலையில், பிரியங்கா புதிய சீரியலில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். நள தமயந்தி எனப் பெயரிடப்பட்ட அந்த சீரியல் ஜீ தமிழ் சேனலில் ஒளிப்பரப்பாக உள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.
Advertisment
Advertisements
தற்போது இந்த சீரியலில் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. ஏழைப் பெண்ணாக நடித்துள்ள பிரியங்கா, அன்னபூரணி மெஸ் என தனது அம்மா நடத்தி வந்த உணவகத்தில் ஏழைகளுக்கு குறைந்த விலையில் உணவு அளித்து வருகிறார். தனது அம்மாவின் ஆசையை நிறைவேற்றும் வகையில் இதனை செய்து வருகிறார்.
மேலும், திருமணத்திற்குப் பிறகும் ஏழைகளுக்கு குறைந்த விலையில் உணவளிக்க ஆதரவு தரும் கணவனை எதிர்ப்பார்த்து காத்திருக்கிறார். அப்போது வசதி படைத்த நாயகன் அறிமுகம் நடக்கிறது. இவ்வாறு ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“