ஜீ தமிழின் நள தமயந்தி சீரியலில் நடித்து வந்த நடிகை பிரியங்கா நல்காரி அந்த சீரியலில் இருந்து விலகியுள்ளதாகவும், அவருக்கு பதிலாக நடிகை ஸ்ரீநிதி என்ட்ரி கொடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ள நிலையில், இது குறித்து பிரியங்கா நல்காரி விளக்கம் அளித்துள்ளார்.
சன் டிவியில் ஒளிபரப்பான "ரோஜா" என்ற ஹிட் சீரியலில் நடித்து புகழ்பெற்ற நடிகை பிரியங்கா நல்காரி, இந்த சீரியல் மூலம் ஏராளமான ரசிகர்களைப் பெற்றிருந்தார். இந்த சீரியலில் இவர் நடித்த ரோஜா கேரக்டரே இவரின் அடையாளமாகவும் மாறியது. இந்த சீரியல் கடந்த 2022-ல் முடிவடைந்த நிலையில், பிரியங்கா அடுத்து ஜீ தமிழின் சீதாராமன் சீரியலில் நாயகியாக நடித்து வந்தார்.
இந்த சீரியலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், ஆனாலும் ஒரு கட்டத்தில் சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்த பிரியங்கா, கடந்த ஆண்டு மார்ச் மாதம் மலேசியாவில் உள்ள ஒரு கோவிலில், பிரியங்கா தனது காதலர் தொழிலதிபர் ராகுல் வர்மாவை திருமணம் செய்து கொண்டார். அவரது திருமணத்தின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
திருமணத்திற்கு பின் மலேசியாவில் குடியேறிய பிரியங்கா, இனி சீரியலில் நடிக்க மாட்டார் என்று தகவல் வெளியாக நிலையில்,எதிர்பார்ப்புகளுக்கு மாறாக, ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் "நள தமயந்தி" என்ற தமிழ் சீரியலின் மூலம் பிரியங்கா மீண்டும் சின்னத்திரையில் களமிறங்கினார். விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் இந்த சீரியலில் கதை மாற்றம் நடைபெற்றுள்ளதாகவும், ஸ்ரீநிதி புதிதாக என்ட்ரி கொடுத்துள்ளதால், பிரியங்கா நல்காரி சீரியலில் இருந்து விலகியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து விளக்கம் அளித்துள்ள பிரியங்கா, நீங்களாக எதையும் கற்பனை செய்துகொள்ள வேண்டும். வீணாக வதந்தியை பரப்பாதீர்கள். நள தமயந்தி சீரியலில் இருந்து நான் விலகவில்லை. அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக காத்திருக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள பிரியங்கா தான் சீரியலில் தொடர்ந்து நடிப்பதையும் உறுதி செய்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“