scorecardresearch

‘எனது ரோல் மாடல் இவங்கதான்’ – வீடியோவாக பதிவிட்ட ரோஜா

Sun Tv’s Roja serial actress Priyanka Nalkari posted her Role model actress’s song as reels video Tamil News: தனது ரோல்மாடலாக ஒருவரை குறிப்பிட்டுள்ள ரோஜா சீரியல் நடிகை பிரியங்கா நல்கரி, அவர் ஆடி நடித்த பாடலை ரீல்ஸ் வீடியோவாக தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

‘எனது ரோல் மாடல் இவங்கதான்’ – வீடியோவாக பதிவிட்ட ரோஜா

Priyanka Nalkari Tamil News: சன் டிவியில் ஒளிபரப்பாகி முன்னணி சீரியல்களுள் ‘ரோஜா’ சீரியலும் ஒன்று. இந்த சீரியலின் ஹீரோயினாக நடிகை “பிரியங்கா நல்காரி” நடித்து வருகிறார். ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் பிறந்த பிரியங்கா முதன் முதலில் ‘அந்தாரி பந்துவையா’ என்ற தெலுங்கு படத்தில் அறிமுகமாகியுள்ளார். தொடர்ந்து நா சாமி ரங்கா, ஹைப்பர் ,நேனே ராஜு நேனே மந்திரி போன்ற படங்களிலும் நடித்து இருக்கிறார்.

தெலுங்கு சீரியல்களிலும் தோன்றிய அவர் ‘மேகமாலா’ மற்றும் ‘ஸ்ரவனா சமீராலு’ ஆகிய 2 சீரியல்களில் நடித்துள்ளார். பிறகு தமிழில் ‘தீயா வேலை செய்யனும் குமாரு’ படத்தில் ஹன்சிகாவின் தோழியாக நடித்தார். அதன் பின்னர், காஞ்சனா 3 படத்தில் ஒரு கேரக்டர் ரோலில் நடித்திருந்தார்.

தற்போது, ரோஜா சீரியல் மூலம் பட்டிதொட்டியெல்லாம் அறிமுகமாகியுள்ள பிரியங்கா தமிழில் டாப் சீரியல் ஹீரோயினாக இருக்கிறார். மேலும், ரோஜா சீரியல் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையும் சம்பாதித்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் பிரியங்கா அவ்வப்போது தான் எடுத்துக்கொள்ளும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். இன்ஸ்டா-வில் மட்டும் இவருக்கு ஐந்து லட்சத்திற்கும் அதிகமான பின்தொடர்பவர்கள் இருக்கிறார்கள்.

இந்நிலையில், பிரியங்கா நல்கரி தனது ரோல்மாடலாக ஒருவரை குறிப்பிட்டுள்ளார். மேலும், அவர் ஆடி நடித்த பாடலை ரீல்ஸ் வீடியோவாக தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

சமீபத்தில் பிரியங்கா நல்கரி தனது குடும்பத்தோடு காஷ்மீருக்கு போயிருந்தார். அங்கு பொங்கல் விடுமுறைக்கு கொண்டாடிய அவர், அன்றாட புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வந்தார். இதற்கு ரசிகர்களும் ஹார்டியன்களை பறக்க விட்டனர்.

தால் ஏரியில் குடும்பத்தினரோடு துள்ளி விளையாடும் வீடியோவை ரீல்ஸ் ஆக பதிவிட்டுள்ளார் ரோஜா. முயல்குட்டி போல உற்சாகமாக தாவி குதிக்கிறார் பிரியங்கா நல்கரி. ஜாலி டூர் முடிந்து மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி விட்டார் ரோஜா. மீண்டும் சூட்டிங் ஸ்பாட்டில் நடனமாடி அதை ரீல்ஸ் ஆக பதிவிட்டுள்ளார்.

படையப்பா படத்தில் இடம்பெற்றுள்ள “சுத்தி சுத்தி வந்தீக”… பாடலின் தெலுங்கு வெர்சன் பாடலுக்கு ஆடியுள்ள பிரியங்கா தனது ரோல்மாடல் நடிகை சவுந்தர்யா என்று தான் தெரிவித்துள்ளார்.

ரசிகர்களின் மனம் கவர்ந்த சவுந்தர்யா

90களில் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சவுந்தர்யா. அவர் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருந்த அனைவருடனும் திரையில் தோன்றியுள்ளார். தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் 2 படங்களிலும், கமல்ஹாசனுடன் ஒரு படத்திலும், கார்த்திக்குடன் 2 படங்களிலும், அர்ஜுன் சர்ஜாவுடன் 1 படத்திலும், விஜயகாந்துடன் 2 படங்களிலும், பார்த்திபனுடன் 2 படங்களிலும் இணைந்து நடித்துள்ளார்.

மேலும், சியான் விக்ரம், ஆனந்த், ரெஹ்மான் ஆகியோருக்கு ஜோடியாக நடித்துள்ளார். தவிர, படையப்பா படத்தில் சிவாஜி கணேசனுடன் திரையை பகிர்ந்து கொண்டார்.

படையப்பா படத்தில் இடம்பெற்றுள்ள “சுத்தி சுத்தி வந்தீக” பாடலில் சவுந்தர்யாவின் முக பவானையும் உதட்டுச்சுழிப்பும் பார்ப்பவர்களின் இதயத்தை சுண்டி இழுக்கும்.

12 ஆண்டுகளில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருந்த நடிகை சௌந்தர்யா “நவீன தெலுங்கு சினிமாவின் சாவித்திரி” என்று பிரபலமாக அழைக்கப்பட்டார். ஆனால், அவர் எதிர்பாராத விதமாக கடந்த 2004ஆம் ஆண்டு பெங்களூரு அருகே நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்து விட்டார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Priyanka nalkari tamil news roja priyanka posted her role model heroine video