Priyanka Nalkari Tamil News: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முன்னணி சீரியல்களில் ஒன்றாக ‘ரோஜா’ சீரியல் உள்ளது. இந்த சீரியலில் ஹீரோயினாக நடிகை ‘பிரியங்கா நல்காரி’ நடித்து வருகிறார். பிரியங்கா ஆந்திராவில் உள்ள விசாகப்பட்டினத்தில் பிறந்தவர். இவர் ‘அந்தாரி பந்துவையா’ என்ற தெலுங்கு படத்தின் மூலம் தான் சினிமாவில் அறிமுகமாகினார்.

இதன்பிறகு, நா சாமி ரங்கா, ஹைப்பர் ,நேனே ராஜு நேனே மந்திரி போன்ற படங்களில் நடித்தார். தொடர்ந்து ‘மேகமாலா’ மற்றும் ‘ஸ்ரவனா சமீராலு’ ஆகிய இரண்டு சீரியல்களிலும் நடித்தார்.

பிரியங்கா, தமிழில் நடிகர் சித்தார்த் நடிப்பில் வெளிவந்த ‘தீயா வேலை செய்யனும் குமாரு’ படத்தில் நடிகை ஹன்சிகாவின் தோழியாக நடித்திருந்தார். பிறகு காஞ்சனா-3 படத்தில் ஒரு கேரக்டர் ரோலில் நடித்தார்.


தற்போது, ரோஜா சீரியல் மூலம் பட்டிதொட்டியெல்லாம் அறிமுகமாகியுள்ள பிரியங்கா தமிழில் டாப் சீரியல் ஹீரோயினாக இருக்கிறார். மேலும், ரோஜா சீரியல் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையும் சம்பாதித்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் பிரியங்கா அவ்வப்போது தான் எடுத்துக்கொள்ளும் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில், துளி மேக்கப் இல்லாத சில புகைப்படங்களை பிரியங்கா சமீபத்தில் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது அவரது ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வரும் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.


ரோஜா சீரியல் இதுவரை…

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா சீரியல் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறது. இதன் தற்போதைய எபிசோடுகளில் அணு யாரென்று அர்ஜுன் கண்டுபிடித்துள்ளார். இதனால், இயக்குநர் சீரியலுக்கு எண்ட் கார்டு போட்டுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், புதிய வில்லியோடு கதை புதிய பாதையில் பயணித்து வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“