நான் ஓடிப்போய் கல்யாணம் பண்ணவ தான்; எப்படி இப்படி டபுள் கேம் ஆட முடியுது? ஷகிலாவுக்கு மணிமேகலை பதிலடி

Manimegalai- நான் ஓடிப்போய் கல்யாணம் பண்ணவ தான். அதை எங்க நிஜ அம்மா கூட ஏத்துக்கிட்டாங்க. ஆனா மம்மி மம்மினு சிலர் வித்தியாசமா கூவிக்கிட்டு இருக்காங்க.

Manimegalai- நான் ஓடிப்போய் கல்யாணம் பண்ணவ தான். அதை எங்க நிஜ அம்மா கூட ஏத்துக்கிட்டாங்க. ஆனா மம்மி மம்மினு சிலர் வித்தியாசமா கூவிக்கிட்டு இருக்காங்க.

author-image
WebDesk
New Update
Manimegalai Shakila

Manimegalai Vs Priyanka

குக் வித் கோமாளிசீசன் 5 நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இருந்தவர் மணிமேகலை. அந்த சீசனில் குக்காக வந்து கலந்து கொண்ட பிரியங்காவுடன் ஏற்பட்ட மோதலால் நிகழ்ச்சியிலிருந்து விலகினார். இதனைத் தொடர்ந்து மணிமேகலை வெளியிட்ட பெரும் வைரலானது.

Advertisment

இதை வைத்து பலரும் பிரியங்காவை கடுமையாக சாடினார்கள். ஆனால், விஜய் தொலைக்காட்சியோ, பிரியங்காவோ இது தொடர்பாக எந்தவொரு கருத்துமே தெரிவிக்காமல் இருக்கிறார்கள்.

இந்த விவகாரம் தொடர்பாக ஷகிலா, ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில்,  சில யூடியூபர்ஸ் மணிமேகலைக்கு ஆதரவா பிரியங்காவின் பர்சனல் வாழ்க்கையை பத்தி பேசுறாங்க. பிரியங்கா தப்பு என்றால் மணிமேகலையும் தப்புதான். பிரியங்காவுக்கு டைவர்ஸ் ஆகிவிட்டது என்பதற்காக அவருடைய பர்சனல் வாழ்க்கையை பற்றி சிலர் பேசுறாங்க.

அப்படி பார்த்தால் மணிமேகலையும் தப்பு தானே? மணிமேகலையும் ஓடிப்போய் கல்யாணம் பண்ணினவங்க தான். அவங்க அம்மா அப்பாவை மீறி விட்டுட்டு ஓடிப்போய் கல்யாணம் பண்ணி இருக்கிறாங்க. அவங்கள நம்ம வீட்டு குழந்தைகளுக்கு உதாரணமா சொல்ல முடியுமா? என்று பேசியிருந்தார்.

Advertisment
Advertisements

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக மணிமேகலை, தன்னுடைய கணவர் ஹூசைனுடன் சேர்ந்து வெளியிட்ட யூடியூப் வீடியோவில்,

வாட்ஸ் அப்பில் வந்து நமகிட்ட மோட்டிவேஷன் கொடுக்கிற மாதிரி பேசுறாங்க ஆனா வீடியோ போட்டு நாம தான் தப்பு என்று பேசுறாங்க. பல வருஷமா கூட இருந்தவங்கன்னு நம்புனா அவங்க தான் நம்மள முதுகுல குத்துனாங்க.

நானே பக்கத்துல இருந்து பார்த்தேன். இதுதான் நடந்தது. இவங்க மேல தான் தப்புனு எப்படித்தான் இப்படி டபுள் கேம் ஆட முடியுதுன்னு தெரியல. இதுக்கெல்லாம் காரணம் பணம் தானே? பணத்துக்காக இப்படி மாறுராங்க. அப்போ இவ்வளவு நாள் பேசுனதெல்லாம் நடிப்பா கோபால்?

நான் ஓடிப்போய் கல்யாணம் பண்ணவ தான். அதை எங்க நிஜ அம்மா கூட ஏத்துக்கிட்டாங்க. ஆனா மம்மி மம்மினு சிலர் வித்தியாசமா கூவிக்கிட்டு இருக்காங்க. இது பத்தி எல்லாம் அவங்க பேசலாமா? வாய் இருக்கிறதுக்காக என்ன வேணாலும் பேசலாமா? என்று அந்த வீடியோவில் மணிமேகலை பேசியிருக்கிறார்.

அந்த வீடியோ

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Vijay Tv

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: