விஜய் டி.வியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி என்ற சமையல் நிகழ்ச்சி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சியாகும். இப்போது குக் வித் கோமாளி சீசன் 5 நடைபெற்று முடிந்துள்ளது. இந்த சீசனில் பிரியங்கா தேஷ்பாண்டே வெற்றி பெற்றுள்ளார்.
இறுதிப் போட்டியில் பிரியங்கா, இர்ஃபான், ஜோயா, விடிவி கணேஷ், பூஜா, சுஜிதா என ஆறு பேர் பங்கேற்றனர். இதில் பிரியங்கா டைட்டில் வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு 5 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்பட்டது.
மேலும் ராமருக்கு கோமாளியாக ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்பட்டிருக்கிறது. அதேபோல் இரண்டாவது இடம் பிடித்த சுஜிதா - புகழ் ஜோடிக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டிருக்கிறது.
இதற்கிடையில் கடந்த சில தினங்களுக்கு முன் இந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்த மணிமேகலை, நிகழ்ச்சியை விட்டு விலகுவதாக அறிவித்தார். அதில், இந்த சீசனில் குக்காக வந்த ஒரு பெண் அவர் வேலையை மறந்து என்னுடைய ஆங்கர் வேலையை செய்கிறார். என்னை வேலையைச் செய்ய விடாமல் ஆங்கர் வேலையில் நிறைய குறுக்கிடுகிறார். சுயமரியாதையை விட வேறு எதுவும் முக்கியமில்லை என்று யாருடைய பெயரையும் குறிப்பிடாமல் பதிவு செய்திருந்தார்.
/indian-express-tamil/media/media_files/FxKRjFEWJWQyTmUWHbCg.jpg)
எனினும், மணிமேகலை குறிப்பிடுவது பிரியங்காவை தான் எனப் பலரும் கூறினர். மேலும், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் சிலரும் இதுபற்றி கருத்து கூறினர். அதோடு சமூக வலைதளத்திலும் மணிமேகலை ஆதரவாகவும் பலர் கருத்து பதிவிட்டனர். இருப்பினும் முழுமையான விவரம் தெரியவில்லை. பிரியங்கா தரப்பில் இருந்து இதுவரை எந்த தகவலும் இல்லை.
இந்நிலையில், சர்ச்சைக்கு இடையில் பிரியங்கா வெற்றி பெற்றுள்ளார். என்னதான் இருந்தாலும் பிரியங்காவை விஜய் டிவி விட்டுக்கொடுக்கவில்லையே. அப்போ மணிமேகலையின் கோபத்துக்கு மதிப்பே இல்லையா என்றும் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“