/tamil-ie/media/media_files/uploads/2021/04/rk-sures.jpg)
தயாரிப்பாளரும் நடிகருமான ஆர்.கே.சுரேஷ்க்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
ஆர்.கே.சுரேஷ், நரேன் நடித்த ‘தம்பிக்கோட்டை’ படம் மூலம் தயாரிப்பாளராக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். தம்பிக்கோட்டைப் படத்தை தொடர்ந்து விஜய் ஆண்டனியின் சலீம், விஜய் சேதுபதி நடித்த தர்மதுரை போன்ற படங்களை தயாரித்தார்.
ஆர்.கே.சுரேஷ் தயாரிப்பாளராக மட்டுமல்லாமல் நடிகராகவும் நடித்து வருகிறார். இவர் கடந்த 2016ஆம் ஆண்டு, இயக்குனர் பாலா இயக்கி சசிக்குமார் மற்றும் வரலெட்சுமி நடித்த ’தாரை தப்பட்டை’ படம் மூலம் நடிகராக அறிமுகமானார். இந்த படத்தில் அவர் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார்.
அதன்பின், ஆர்கே சுரேஷ் மருது, ஸ்கெட்ச், பில்லா பாண்டி, காளி, நம்ம வீட்டு பிள்ளை, புலிக்குத்தி பாண்டி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
இதில், விஷாலின் ‘மருது’ படத்தில் மிரட்டல் வில்லனாக நடித்திருப்பார் ஆர்கே சுரேஷ். ஆனால் சிவகார்த்திகேயனின் ’நம்ம வீட்டுப்பிள்ளை’ படத்தில் குணச்சித்திர கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார். இந்த படத்தில் சமுத்திரக்கனிக்கு நண்பனாக நடித்திருப்பார். தற்போதும் சில படங்களில் ஆர்.கே.சுரேஷ் வருகிறார்
ஆர்.கே.சுரேஷ்க்கு கடந்த 2017ஆம் ஆண்டு சீரியல் நடிகை திவ்யாவுடன் திருமண ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக இவர்களின் திருமணம் நடைபெறாமல் நின்றுபோனது.
அதன் பிறகு சினிமா பைனான்சியரான மது என்பவரை கடந்த ஆண்டு திருமணம் செய்தார் ஆர்.கே.சுரேஷ். தற்போது இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
இந்த தகவலை ஆர்கே சுரேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், எங்கள் வாழ்க்கையில் கிடைத்துள்ள புதிய ஆசீர்வாதத்தைப் பகிர்ந்து கொள்வதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். எங்கள் குடும்பம் பெண் குழந்தையுடன் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது. தாயும் சேயும் நலமாக உள்ளனர் என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
We are very happy to share our newest blessing in our life . Our family is blessed with little girl and both mom & baby are doing good 😊 pic.twitter.com/rOf9UMR8GE
— RK SURESH (@studio9_suresh) April 23, 2021
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)

Follow Us