லியோ படத்திற்கு பிறகு தளபதி விஜய் அடுத்து தனது 68-வது படமாக வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்து வரும் நிலையில், இந்த படத்தின் டைட்டில் குறித்து வரும் வதந்திகளுக்கு தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி விளக்கம் அளித்துள்ளார்.
ஆங்கிலத்தில் படிக்க : Producer Archana Kalpathi says Vijay’s Thalapathy 68 is neither titled Boss nor Puzzle
லியோ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்து வருகிறார். தற்காலிகமாக தளபதி 68 என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில், பிரசாந்த், சினேகா, லைலா, மோகன், பிரபுதேவா, மீனாட்சி சவுத்ரி, ஜெயராம் உள்ளிட்ட முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.
தாய்லாந்து மற்றும் சென்னையில் படத்தின் பல ஷெட்யூல்களை முடித்துள்ள வெங்கட் பிரபு அடுத்து ஆந்திராவில் சில காட்சிகளை படமாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே படத்தின் டைட்டில் குறித்து பல்வேறு வதந்திகள் பரவி வருகிறது. இதில் படத்திற்கு முதலில் பஸ்ஸில் (Puzzle) என்று டைடில் வைக்கப்பட்டுள்ளதாகவும், அடுத்து பாஸ் என்று வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி வருகிறது.
ஏற்கனவே கடந்த 2018-ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்தை தயாரித்த ஏ.ஜி.எஸ் நிறுவனம் தான் தளபதி 68 படத்தை தயாரித்து வருகிறது. பிகில் படம் தயாரிப்பில் இருந்தபோது அதன் அப்டேட் கேட்டு ரசிகர்கள் தயாரிப்பு நிறுவனத்தை தொடர்புகொண்ட நிலையில், தற்போது 5 வருடங்களுக்கு பிறகு மீண்டும் தளபதி 68 அப்டேட் கேட்டு ரசிகாகள் காத்திருப்பதால், படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தேஜா வு உணர்வுடன் இருக்கிறார்.
ஒரு படத்திற்கு 'டைட்டில் ரிவீல்' என்பது ரசிகர்களை படத்தோடு ஈடுபாட்டுடன் வைத்திருக்க தயாரிப்பு நிறுவனங்களுக்கு ஒரு முக்கியமான விளம்பர தந்திரமாக மாறியுள்ளது. படத்தின் தலைப்பைப் பற்றிய பல யூகங்கள் படத்திற்கு பெரும் விளம்பரமாக அமைந்துள்ளது. அதுதான் தற்போது தளபதி 68 படத்திலும் நடக்கிறது. ஆனால் இதுவரை வெளியான பஸ்ஸில் மற்றும் பாஸ் ஆகிய 2 டைட்டில்களும் இல்லை என்று அர்ச்சனா திட்டவட்டமாக குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “எல்லா அப்டேட்களையும் பார்த்தேன். உங்கள் அன்புக்கு நன்றி. அமைதியாக இருங்கள் மற்றும் உண்மையான டைட்டிலை விரைவில் எதிர்பார்க்கவும். வெங்கட் பிரபு ஏதோ ஸ்பெஷலாக சமைக்கிறார். இது நிச்சயமாக பாஸ் அல்லது பஸ்ஸில் அல்ல. அனைவருக்கும் காலை வணக்கம் என்று கூறியுள்ளார். அர்ச்சனா கல்பாத்தியின் ட்விட்டர் பதிவு வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் பலரும் தளபதி 68 அப்டேட் கேட்டு வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“