/tamil-ie/media/media_files/uploads/2022/09/K-rajan.jpg)
சென்னையில் நடைபெற்ற லோக்கல் சரக்கு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் ராஜன் மற்றும் நடிகர் செண்ராயன் இடையே ஏற்பட்ட கருத்து மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
விஜய் நடித்த சுறா, மற்றும் அழகர் மலை படத்தை இயக்கிய எஸ்.பி.ராஜ்குமார் இயக்கியுள்ள படம் லோக்கல் சரக்கு. நடன இயக்குனர் தினேஷ் மாஸ்டர் மற்றும் யோகிபாபு இணைந்து நடித்துள்ள இந்த படத்தை டிஸ்கவர் ஸ்டூடியோஸ் நிறுவனம் சார்பில், தயாரித்துள்ள சாமிநாதன் ராஜேஷ் என்பவர் இந்த படத்திற்கு இசையும் அமைத்துள்ளார்
இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இயக்குனர் ஆர்.கே.செல்வமணி, தயாரிப்பாளர் கே.ராஜன், இசையமைப்பாளர் சங்கர் கணேஷ், நடிகர் ராதா ரவி செண்ராயன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர் இந்த நிகழ்ச்சியில் பேசிய தயாரிப்பாளர் கே.ராஜன், கருத்துக்கு மேடையில் இடைமறித்து நடிகர் செண்ராயன் பேசியது தற்போது பரபரப்பாகியுள்ளது
இந்த படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இசையமைப்பாளரான ராஜேஷ் சாமிநாதன் குறித்து பேசிய தயாரிப்பாளர் கே.ராஜன், நீங்கள் தயாரிப்பாளராக ஆகியுள்ளீர்கள். ஆனால் எண்ணற்ற படங்களுக்கு இசையமைத்துவிட்டு தயாரிப்பளராக வாருங்கள். முதலில் சம்பாதித்துக்கொள்ளுங்கள். அதன்பிறகு படம் எடுங்கள். படம் எடுக்க தொடங்கிவிட்டால் இசையில் கவனம் செலுத்த முடியாமல் போய்விடும்.
தயாரிப்பாளர்களாக இருப்பவர்கள் பலகோடிரூபாய் செலவு செய்து படம் எடுத்தாலும் நடுத்தெருவுக்குதான் வந்துகொண்டிருக்கிறார்கள். நடிகர் நடிகைகள் வளர்ச்சியை எட்டுவதற்கு காரணமாக இருக்கும் தயாரிப்பாளர்களை நினைத்து பார்க்க வேண்டும். அதுதான் நன்றிக்கடன். ஆனால் அதை யாரும் செய்வதில்லை என்று கூறியிருந்தார்.
அப்போது குறுக்கிட்டு பேசிய நடிகர் செண்ராயன், எங்களுக்கு முதலாளி தயாரிப்பாளர்கள் தான். அவர்கள் படம் எடுத்தால்தான் எங்களுக்கு வேலை. என்று கூறினார். இதனால் கோபமாக கேராஜன். போப்பா போய் உட்காரு நாங்க உங்களுக்கு வேற வேலை வாங்கி தரோம் அவங்களுக்கு வேலை இல்லாமல் ஆகிவிடக்கூடாது எங்களுக்கு தெரியும் பெருசா வந்துட்டாரு உங்களுக்கு வேலை கொடுப்பதற்கு நாங்கள் எல்லாம் வெளியே போக வேண்டுமா என்று கேட்டுள்ளார். இந்த பேச்சு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.