scorecardresearch

மகாலட்சுமி இப்படி பண்ணிட்டாங்களா? ஆதாரத்தோடு வெளியிட்ட ரவீந்திரன்

திருமணத்திற்கு பின் புது மனைவிக்காக ஒவ்வொரு விஷயத்தையும் ரவீந்திரன் பார்த்து பார்த்து செய்து வருகிறார்.

மகாலட்சுமி இப்படி பண்ணிட்டாங்களா? ஆதாரத்தோடு வெளியிட்ட ரவீந்திரன்

சின்னத்திரையில் திருமணத்தின் மூலம் வைரலான ஜோடி ரவீந்திரன் மகாலட்சுமி. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவர்கள் திருப்பதியில் திருமணம் செய்துகொண்டனர். திருமணத்திற்கு பின் இவர்கள் பெற்ற வாழ்த்துக்களை விட விமர்சனங்கள் தான் அதிகம் என்று சொல்லாம். ஆனாலும் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் இவர்கள் தங்களது வாழக்கையை ஜாலியாக வாழ்ந்து வருகின்றனர்.

திருமணத்திற்கு பின் புது மனைவிக்காக ஒவ்வொரு விஷயத்தையும் ரவீந்திரன் பார்த்து பார்த்து செய்து வருகிறார். இதன் காரணமாகவே தற்போதுவரை இந்த தம்பதி இணையத்தில் அதிகம் ட்ரெண்டாகி வருகிறது. மேலும் சமீபத்தில் தீபாவளி பரிசாக மனைவி மகாலட்சுமிக்கு ரவீந்திரன் புதிய கார் வாங்கி கொடுத்து அசத்தினர்.

மேலும் மனைவிக்கு அதிக சர்ப்ரைஸ் கொடுக்கும் ரவீந்திரன் மனைவியின் செயல்கள் குறித்து சமூக வலைதளங்களில் பதவிட்டு வருவதையும் மறக்கவில்லை. அந்த வகையில் தற்போது மகாலட்சுமி செய்த ஒரு விஷயத்தை போட்டோ ஆதாரத்துடன் ரவீந்திரன் வெளியிட்டுள்ளது சமூக வலைதளங்ளில் வைரலாகி வருகிறது.

முட்டையை வேக வைப்பதற்காக ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் முட்டையை வைத்து கேஸ் அடுப்பில்வைத்து விட்டு சென்றுள்ளார் மகாலட்சுமி. அதன்பிறகு அதை கவனிக்காமல் விட்டதால் தண்ணீர் வற்றி முட்டை பாத்திரத்திலேயே கருகிவிட்டது. இதை போட்டோ எடுத்து பதிவிட்டுள்ள ரவீந்திரன் தனது பதிவில்,

எனது வாழ்நாளில் இப்படி ஒரு கருகிய முட்டையை நான் பார்த்ததே இல்லை புது மனைவி சூப்பர் சமையல்காரி என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வரும் நிலையில், நெட்டிசன் ஒருவர் தலைவரே வெந்து தணிந்தது எஃகு என்று பதிவிட்டுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Producer ravindran instagram post about his wife cooking