கேப்டன் படத்தில் 3.5 லட்சம் நஷ்டம், 7 லட்சம் திருப்பி கொடுத்தார்; 38 வருடம் முன்பு நடந்த சம்பவம்!

நடிகர் விஜயகாந்த் குறித்து தயாரிப்பாளர் டி.சிவா மனம் திறந்துள்ளார்.

நடிகர் விஜயகாந்த் குறித்து தயாரிப்பாளர் டி.சிவா மனம் திறந்துள்ளார்.

author-image
WebDesk
New Update
vijaykanth

கேப்டன் படத்தில் 3.5 லட்சம் நஷ்டம், 7 லட்சம் திருப்பி கொடுத்தார்; 38 வருடம் முன்பு நடந்த சம்பவம்!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் விஜயகாந்த். இவர் முன்னணி இயக்குநர்கள் பலரின் படங்களில் நடித்துள்ளார். இவரை ரசிகர்கள் ‘கேப்டன்’ விஜயகாந்த் என்று அழைத்து வந்தனர். நடிகர் விஜயகாந்த் நடிப்பது மட்டுமல்லாமல் அரசியலிலும் ஈடுபட்டு வந்தார். உதவி செய்யும் மனம் படைத்த நடிகர் விஜயகாந்த் தன்னால் நஷ்டமடைந்த தயாரிப்பாளர்களுக்கு பண உதவி போன்றவற்றை  செய்துள்ளார்.

Advertisment

அதுமட்டுமல்லாமல், படப்பிடிப்பு தளத்தில் நான் சாப்பிடும் சாப்பாட்டை தான் அனைவரும் சாப்பிட வேண்டும் என்று அனைவருக்கும் பாரபட்சமின்றி ஒரே வகையில் உணவு கொடுத்தவர். இந்நிலையில், கேப்டன் விஜயகாந்த் குறித்து தயாரிப்பாளர் டி.சிவா மனம் திறந்துள்ளார். அவர் பேசியதாவது,  “நான் ஒரு புகைப்பட கலைஞர். புகைப்படம் எடுக்க வந்த இடத்தில் சினிமா மீது ஆசை வந்து. பின்னர் நண்பரும் இயக்குநருமான நேதாஜியோட சேர்ந்து படம் எடுக்கலாம் என்று முடிவு செய்தேன். 

நடிகர் விஜயகாந்த் வைத்து தான் படம் எடுக்க வேண்டும் என்று முடிவெடுத்து அவரிடம் கதை சொன்னோம். விஜயகாந்தும் ஓகே சொல்லிவிட்டார்.  நீ ரொம்ப சின்ன பையனா இருக்கியே படம் எடுத்துருவியா? என்று கேட்டார். நான் இயக்கிவிடுவேன் என்று கூறினேன். சரி நல்லா பண்ணு நான் கூட இருக்கிறேன் என்றார். அப்பறம் படம் எல்லாம் நன்றாக எடுத்து முடித்தோம். நான் ஊரில் இருந்து மூன்று லட்சம் ரூபாய் கையில் பணமாக கொண்டு வந்து படம் ஆரம்பித்தேன்.

பின்பு நிறைய உதவிகளுடன் படத்தை எடுத்து முடித்தோம். படத்திற்காக ஐந்து லட்சம் ரூபாய் போட்டிருந்தேன் அதில் மூன்றரை லட்சம் ரூபாய் நஷ்டமாகிவிட்டது. 42 வருடம் முன்பு மூன்றரை லட்சம் எவ்வளவு பெரிய தொகை அது குடும்பத்தில் எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தெரிந்து கொள்ளுங்கள். எல்லாம் முடிந்த பிறகு விஜயகாந்த் அவரது அலுவலகத்திற்கு என்னை வர சொன்னார். ஒன்றும் பயப்படாதே, நீ விட்டுவிடு நான் பார்த்துக்கொள்கிறேன் என்றார். நானும் விட்டுவிட்டேன்.

Advertisment
Advertisements

அதன் பிறகு தமிழ் அன்னை சினி கிரேஸ் என்று ஒரு கம்பெனி ஆரம்பித்து ’பூந்தோட்ட காவல்காரன்’ என்ற படத்தை ஆரம்பித்தார். அதில், நீ பார்ட்னர் என்றும் உனக்கு 25 சதவிகிதம் தருகிறேன் என்று சொல்லி படத்தை தயாரித்து டி.சிவா என்று பெயர் போட்டு அவருடைய கம்பெனியிலேயே கூடவே வைத்திருந்தார்.  ‘பூந்தோட்ட காவல்காரன்’ படம் ரீலீஸான பிறகு என்னை அழைத்தார். முதல் படத்தில் உனக்கு எவ்வளவு லட்சம் நஷ்டம் என்று கேட்டார். மூன்றரை லட்சம் என்றேன். ஒரு பேக் எடுத்து கையில் கொடுத்து 7 லட்சம் இருக்கிறது போதுமா? என்று கேட்டார்” என்றார்.

Vijayakanth

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: