கமல், விஜய், அஜித் பட தயாரிப்பாளர் கொரோனாவால் உயிரிழப்பு

’உனக்காக எல்லம் உனக்காக’, ’உன்னைத் தேடி’, ’கண்ணன் வருவன்’, மற்றும் ’உள்ளம் கொள்ளை போகுதே’ என 1999 முதல் 2001 வரை தொடர்ச்சியாக சுந்தர் சி-யின் படங்களை தயாரித்தார்.

By: August 11, 2020, 9:54:15 AM

கோவிட் -19 தொற்றால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த லட்சுமி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பாளர் வி.சுவாமிநாதன் சிகிச்சை பலனின்றி காலமானார்.

கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல், இந்த ஸ்னாக்ஸ் செய்து பாருங்க!

பிரபல தயாரிப்பாளரான இவர் தனது தயாரிப்புகளில் சிறப்புத் தோற்றங்களில் நடித்திருந்தார். வி.சுவாமிநாதன் சமீபத்தில் கொரோனா தொற்றுக்கு நேர்மறையாக பரிசோதிக்கப்பட்டார். பின்னர் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி, நேற்று அவர் காலமானார் என்று தெரிகிறது. இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இவரது இளைய மகன் அஸ்வின் ராஜா, கும்கி அஸ்வின் என்று பிரபலமாக அறியப்படுகிறார். அஸ்வினுக்கு சமீபத்தில் திருமணம் நடந்தது.

வி.சுவாமிநாதன் 90-களில் இருந்து தனது பேனரின் கீழ் பல திரைப்படங்களை தயாரித்துள்ளார். அவரது முதல் தயாரிப்பு சரத்குமார் நடித்த ‘அரண்மனை காவலன்’, சுந்தர்.சி இயக்கத்தில், கமல்ஹாசனின் ‘அன்பே சிவம்’ படத்தையும் தயாரித்துள்ளார். சுவாரஸ்யமாக, அவர் இயக்குனர் சுந்தர் சி-யுடன் அதிகம் பணியாற்றியுள்ளார். ’உனக்காக எல்லம் உனக்காக’, ’உன்னைத் தேடி’, ’கண்ணன் வருவன்’, மற்றும் ’உள்ளம் கொள்ளை போகுதே’ என 1999 முதல் 2001 வரை தொடர்ச்சியாக சுந்தர் சி-யின் படங்களை தயாரித்தார். இவர்கள் கூட்டணியில் 2003-ல் ’அன்பே சிவம்’ வெளியானது.

முதல் முயற்சி, தேசிய அளவில் 171-வது இடம் : சிவில் சர்வீஸில் அண்ணாவின் கொள்ளுப் பேத்தி

பிரபல தயாரிப்பாளரான இவர், தளபதி விஜய் நடித்த ‘பிரியமுடன்’ மற்றும் ‘பகவதி’ ஆகிய படங்களையும் தயாரித்துள்ளார். அதே நேரத்தில் தல அஜித்துடன் ‘உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்’ மற்றும் ‘உன்னைத் தேடி’ ஆகிய படங்களிலும் பணியாற்றினார். செல்வராகவன் இயக்கிய பிரபல திரைப்படமான ‘புதுப்பேட்டை’ படத்தையும் சுவாமிநாதனின், லட்சுமி மூவி மேக்கர்ஸ் தான் தயாரிக்கப்பட்டது. கடைசியாக இவர், ஜெயம் ரவி மற்றும் த்ரிஷா நடித்த ‘சகலகலா வல்லவன்’ என்ற படத்தை தயாரித்திருந்தார். இதனை இயக்குநர் சூரஜ் இயக்கியிருந்தார்.

COVID-19 காரணமாக பிரபல தயாரிப்பாளர் உயிரிழந்தது, திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Producer v swaminathan passed away due to coronavirus

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X