நடிகர் வடிவேலு இனிமேல் படங்களில் நடிக்க தடை விதிக்க, தயாரிப்பாளர் சங்கம் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் வடிவேலு, நகைச்சுவை நடிகராகவும், ஹீரோவாகவும், குணசித்திர நடிகராக பல படங்களில் நடித்து அசத்தியுள்ளார். இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் மத்தியில் வடிவேலுக்கு எப்பவுமே மவுசு அதிகம். சமூக வலைத்தளங்களில் தற்போது வெளியாகும் மீம்ஸ்களில் வடிவேல் இல்லாத மீம்ஸ்களை பார்க்கவே முடியும்.
இப்படி அசாத்திய திறன் படைத்த வடிவேலுவை சமீப காலமாக படங்களில் பார்ப்பதில்லை. கடைசியாக விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் திரைப்படத்திலும் வடிவேலுவின் காமெடி கம்மியாக தான் இருந்தது. இந்நிலையில், வடிவேல் இனிமேல் படங்களில் நடிக்க தடை விதிக்க தயாரிப்பாளர் சங்கம் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இம்சை அரசன் 24-ம் புலிகேசி-2 படத்தில் நடிக்க வடிவேலு மறுத்துள்ளார். இதன் முதல் பாகத்தில் நடிகர் வடிவேலு தான் நடித்திருந்தார். இந்த திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை பெற்றிருந்த நிலையில், இதன் இரண்டாம் பாகத்திலும் வடிவேலுவை நடிக்க வைக்க தயாரிப்பாளர் ஷ்ங்கர் திட்டமிட்டிருந்தார்.
ஆனால் இந்த படத்தில் நடிக்க வடிவேலு மறுத்துள்ளார். இதனால் படத்தின் தயாரிப்பாளரான இயக்குனர் ஷங்கர் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளித்து இருந்தார். வடிவேலுவிடம் விளக்கம் கேட்டு சங்கம் சார்பில் 2 கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
இதற்கு பதில் அளித்த வடிவேலு, “ஒப்பந்த காலம் முடிந்து ஒரு வருடத்துக்கு பிறகு கெட்ட நோக்கோடு புகார் அளிக்கப்பட்டு உள்ளது. இந்த படத்துக்கு ஒப்புக்கொண்ட பிறகு 2016-2017 ஆண்டு காலங்களில் பல்வேறு படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தும் ஒப்புக்கொள்ளாமல் இருந்தேன்.
பொருளாதார குடும்ப சூழ்நிலை மற்றும் மன உளைச்சல் காரணங்களால் இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தில் மேற்கொண்டு நடிக்க நாட்கள் ஒதுக்க இயலாத நிலையில் உள்ளேன்” என்று தெரிவித்திருந்தார்.
இதைத்தொடர்ந்து வடிவேல் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து தயாரிப்பாளர்கள் சங்கம் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. படங்களில் நடிப்பதற்கு அவருக்கு தடை விதிக்கப்படலாம் என்று தயாரிப்பாளர்கள் சங்க வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. இந்த செய்திகள் வடிவேலு ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
அப்படி, தடை உறுதி செய்யப்பட்டால், வடிவேலை இனி வரும் காலங்களில் மீம்ஸ்களில் மட்டுமே பார்த்து ரசிக்க முடியும் என்பது எற்றுக்ம் கொள்ள முடியாத ஒன்று.