/tamil-ie/media/media_files/uploads/2019/04/z429.jpg)
high court
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு தனி அதிகாரம் நியமிக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நாளை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கு அரசு சார்பில் தனி அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தை விஷால் தலைமையிலான தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் நிர்வகித்து வருகிறார்கள். இவர்களின் பதவிக்காலம் வருகிற 30 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
இந்நிலையில் தயாரிப்பாளர் சங்கத்தின் தேர்தல் தேதியை தீர்மானிக்கவும் வரவு செலவு கணக்குகளை தாக்கல் செய்து ஒப்புதல் பெறவும் வருகிற மே 1ஆம் தேதி பொதுக்குழு கூட இருப்பதாக தெரிகிறது.
இந்த நிலையில் தயாரிப்பாளர் சங்கத்தை நிர்வகிக்க அரசு அதிகாரி ஒருவரை தமிழக அரசு நியமித்துள்ளது. தமிழக அரசின் வணிகவரித் துறையும், பதிவுத் துறையும் இணைந்து சென்னை மத்திய பதிவுத்துறை அதிகாரி என்.சேகரை தனி அதிகாரியாக நியமித்துள்ளது. இது திரைப்பட தயாரிப்பாளர் சங்க வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் தனி அதிகாரி நியமனத்துக்கு எதிராக தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கில் தயாரிப்பாளர் சங்கத்தில் எந்தவித முறைகேடும் நடைபெறாத நிலையில், தற்போது அரசு தனி அதிகாரி நியமித்தது சட்டவிரோதம் ஆகும். எனவே இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று நீதிபதி ரவிசந்திரபாபு முன்பு இன்று விஷால் தரப்பில் முறையிடபட்டது. இது தொடர்பாக வழக்கை நாளை விசாரிப்பதாக நீதிபதி அனுமதி அளித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.