இருட்டு அறையில் முரட்டு குத்து . ,ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது, பாம்பாட்டம், ஜாம்பி, படிக்காத பக்கங்கள். துருவங்கள் பதினாறு, சைத்ரா, பென்சில் , மூக்குத்தி அம்மன் போன்ற படங்களில் நடித்த யாஷிகா ஆனந்த் இன்று புதுவை வருகையொட்டி அவருக்காக வரவேற்புக்கு வைக்கப்பட்ட ஆபாசமான பேனர்களை இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் பேனர்களை கிழித்திருந்து யாஷிகா திரும்பி போ திரும்பி போ என கோஷங்களை எழுப்பினர்.
/indian-express-tamil/media/media_files/jHrdrwAlbfdP86wK7zsl.jpeg)
புதுச்சேரி கருவடிக்குப்பம் அருகே உள்ள பிக் பேங்க் ஆப் போகோ என்ற ரெஸ்ட்டோபருக்கு இன்று மாலை நடனம் ஆடவும் அங்கு தயாரிக்கப்படும் உணவுகளை ருசி பார்த்து அதற்கு கமெண்ட் கொடுக்கவும் இன்று வருகை தந்தார் .
இதற்காக ஹோட்டல் நிர்வாகம் பல்வேறு நகரப் பகுதியில் முக்கிய இடங்களில் யாஷிகா ஆனந்துக்கு பேனருக்கு வைக்கப்பட்டிருந்தன. அதே போன்று இந்திரா காந்தி சிலை அருகில் யாஷிகாவிற்கு பேனர் வைக்கப்பட்டிருந்தது.
இந்திய மாதர் சங்கத்தின் சார்பில் கல்கத்தா மருத்துவமனையில் டாக்டர் பாலியல் தொந்தரவு செய்யப்பட்டு சம்பவத்தை தொடர்ந்து அங்கு நூற்றுக்கும் மேற்பட்ட இந்திய மாத சங்கத்தினர் கூடிய ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்தனர்.
அப்பொழுது அங்கு வைக்கப்பட்டிருந்த இந்த ஆபாச பேனரைப் பார்த்து மாதர் சங்கத் தலைவி முனியம்மா மற்றும் செயலாளர் இளவரசி தலைமையில் அந்த பேனர்களை கிழித்து அப்புறப்படுத்தினர்.
உடனடியாக அங்கிருந்து போலீசார் அவர்களுடன் அந்த பேனரை எடுத்து அப்புறப்படுத்தி அவர்களை விலக்கிச் சென்றனர்.இதற்கு முன்பாக லாஸ்பேட்டை பகுதி முழுவதும் யாஷிகா ஆனந்திற்கு இந்த ஆபாச பேனர் வைக்கப்பட்டிருந்தது உடனடியாக இந்து முன்னணி சேர்ந்த சிலர் லாஸ்பேட்டை காவல் துறையினரிடம் புகார் தெரிவித்தனர் .
உடனடியாக லாஸ்பேட்டை போலீசார் அனைத்து பேனர்களும் அப்புறப்படுத்தினர்.இந்து முன்னணி சார்பில் போலீசாருக்கு நன்றியும் தெரிவித்துள்ளனர்.
/indian-express-tamil/media/media_files/3b9L900jhFcxn0B3zDot.jpg)
புதுச்சேரி ஆன்மீக புண்ணிய பூமியில் சிவாஜி சிலை அருகாமையில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் பப்பு கிளப் பாரில் மாலை குடிக்க வரும் நடிகையின் ஆபாசமான படங்களை காட்டி பார் வருமானத்துக்காக சில முக்கியமான நகரங்களில் கலாச்சார சீரழிவு ஜனநாயகத்துக்கு விரோதமாக வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற சொல்லி இந்து மக்கள் கட்சியின் சார்பாக போராட்டம் செய்ய இருந்ததை பார்த்து லாஸ்பேட்டை முத்தியால்பேட்டை காவல் துறை அதிகாரிகளும் ஐஏஎஸ் போலீஸ் அதிகாரிகள் ஸ்பெஷல் பிரான்ச் போலீஸ் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக அனைத்து பேனர்களையும் அகற்றி நடவடிக்கை எடுக்கப்பட்டதை இந்து முன்னணி சார்பாக மிக நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.
செய்தி : பாபு ராஜேந்திரன்
புதுச்சேரி
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“