Advertisment

திரையரங்கு டிக்கெட் கட்டணம் உயர்வு : புதுச்சேரியில் நாளை முதல் அமல்

பால்கனி டிக்கெட் கட்டணம் 150 ரூபாயிலிருந்து 170 ரூபாயாக உயர்ந்துள்ளது.160 ரூபாய் என இருந்த பாக்ஸ் டிக்கெட் 180ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

author-image
WebDesk
Nov 09, 2023 19:23 IST
New Update
Puducherry Theater

புதுச்சேரி திரையரங்கு டிக்கெட் கட்டணம் உயர்வு

பாபு ராஜேந்திரன்  புதுச்சேரி

Advertisment

புதுச்சேரியில் உள்ள திரையரங்குகளில் குறைந்தபட்சம் ரூ.10 முதல் அதிகபட்சம் 30 ரூபாய் வரை சினிமா டிக்கெட் கட்டணத்தை உயர்த்திக்கொள்ள அரசு அனுமதியளித்துள்ளது.

புதுச்சேரியில் திரையரங்கு உரிமையாளர்கள் டிக்கெட் கட்டணத்தை உயர்த்த அண்மையில் அரசுக்கு மனு அளித்தனர். இதனை ஏற்று கட்டண உயர்வுக்கான உத்தரவை ஆட்சியர் வல்லவன் பிறப்பித்துள்ளார். இதன்படி 3ஆம் வகுப்பு டிக்கெட் கட்டணம் 50 ரூபாயில் இருந்து 60 ரூபாயாக உயர்கிறது. 2ஆம் வகுப்பு டிக்கெட் கட்டணம் 75 ரூபாயில் இருந்து 100 ரூபாய் ஆகவும், முதலாம் வகுப்பு 100 ல் இருந்து 130 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

ticket.

பால்கனி டிக்கெட் கட்டணம் 150 ரூபாயிலிருந்து 170 ரூபாயாக உயர்ந்துள்ளது.160 ரூபாய் என இருந்த பாக்ஸ் டிக்கெட் 180ஆக உயர்த்தப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 10 ரூபாய் அதிகபட்சம் 30 ரூபாய் என உயர்த்தப்படுறது. இந்தக் கட்டண உத்தரவு நாளை முதல் அமலுக்கு வருவதாக திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Puducherry
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment