உலக திரைப்படத் திருவிழா 2024 புதுச்சேரி அலையன்ஸ் பிரான்சிஸ் திரையரங்கில் நாளை ஆகஸ்ட் 2, 3, 4 புதுச்சேரி அலையன்ஸ் பிரான்சிஸ், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், புதுச்சேரி திரைப்பட இயக்கம் ஆகிய அமைப்புகள் இணைந்து நாளை 2,3,4 ஆகிய மூன்று நாட்களில் உலகத் திரைப்படவிழா நடக்கிறது.
திரைப்படத் திருவிழா புதுச்சேரி அலையன்ஸ் பிரான்சிஸ் அரங்கில் 2 ஆம் தேதி மாலை 5:30 மணிக்கு தொடங்குகிறது. தொடக்க திரையிடலாக பிரசன்னா விதனகே அவர்களின் இயக்கத்தில் அண்மையில் வெளியான 'பாரடைஸ்' (Paradise) திரைப்படம் திரையிடப்படுகிறது.
இப்படத்தின் இயக்குனர், சர்வதேசப் புகழ் பெற்ற இலங்கையைச் சேர்ந்த பிரசன்னா விதனகே தொடங்கி வைக்கிறார். தொடக்க விழாவிற்கு அலையன்ஸ் பிரான்சிஸ் தலைவர் டாக்டர் நல்லாம் சதீஷ் தலைமையேற்கிறார். புதுச்சேரி
திரைப்பட இயக்க செயலாளர் கே.ஆர் ரவிச்சந்திரன் வரவேற்புரை நிகழ்த்துகிறார். தொடக்க விழாவில், சிறப்பு விருந்தினராக சுற்றுலாத் துறை அமைச்சர் க. லட்சுமி நாராயணன் தலைமைச் செயலர் சரத் சவுகான் அலையன்ஸ்
பிரான்சிஸ் இயக்குனர் லாரண்ட் ஜலிக்கஸ், திரை இயக்குனர் எம். சிவக்குமார், நடிகை ரோகிணி, த.மு.எ.க.ச பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா, கு.பச்சையம்மாள் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.
தொடக்க விழாவை, புதுச்சேரி திரை இயக்க உமா அமர்நாத், பொருளாளர் அ. செல்வம் ஒருங்கிணைக்கிறார். திரைப் படவிழாவில் இந்தியா, பிரான்ஸ், இலங்கை, துருக்கி, ஈரான், அமெரிக்கா, ஸ்வீடன் ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஏழு திரைப்படங்கள் திரையிடப்படுகின்றது. பிரசன்னா விதனகே. எம் சிவக்குமார் மோகன் ஆகியோரின் சிறப்பு வகுப்பு மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
உலக அளவில் சிறந்த, பல சர்வதேச திரைப்பட விழாக்களில் விருதுகள் பெற்ற திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. புதுச்சேரியில் இது போன்ற மிகச் சிறந்த திரைப்படங்கள் திரையிடப்படும் திரைப் படவிழாவில் எடிட்டர் லெனின் மற்றும் எழுத்தாளர்கள் தமிழ்ச்செல்வன், மதுக்கூர் ராமலிங்கம், கவிஞர் சைதை ஜெ. களப்பிரன், தமிழ்மணி ஆகியோருடன் த.முஎ.க.ச., திரைஇயக்க நிர்வாகிகள் எஸ்.ராமச்சந்திரன். மணி. கலியமூர்த்தி, அருண்குமார். கு.நிலவழகன் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அலையன்ஸ் பிரான்சிஸ் மற்றும் திரை இயக்க நிர்வாகிகள் சிறப்பாக செய்து வருகின்றனர். தமிழகம் புதுச்சேரியில் இருந்து நூற்றுக்கணக்கான பார்வையாளர்களும் இளம் இயக்குனர்களும் இத்திரைப்பட திருவிழாவில் பங்கேற்கிறார்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“