நடிகர் ரஜினிகாந்த் பூரண குணமடைய வேண்டி புதுச்சேரி மறைமலை அடிகள் சாலை உள்ள ஸ்ரீ பாதாள பொன்னியம்மன் கோவிலில் ரசிகர்கள் தீச்சட்டி எடுத்து வேண்டுதல் நிறைவேற்றினர்.
உடல் நலக்குறைவு காரணமாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சென்னை அப்போலோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் ரஜினிகாந்த் நலமுடன் உள்ளார் இன்னும் ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது இதனால் அவர் ரசிகர்கள் நிம்மதி அடைந்தனர்
இந்நிலையில் புதுச்சேரி மறைமலை அடிகள் சாலையில் உள்ள பாதாள பொன்னியம்மன் கோவிலில் ரசிகர்கள் இன்று மாலை தீச்சட்டி ஏந்தி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆரோக்கியமாக உடல் நலம் பெற்று மீண்டும் திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என வேண்டிக்கொண்டு தீச்சட்டி எடுத்தனர். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“