பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் ஜூன் 14-ம் தேதி தற்கொலை செய்துக் கொண்டார். இது அவரது ரசிகர்கள், பின்தொடர்பாளர்கள், பாலிவுட் துறையை மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ’எம்.எஸ். தோனி தி அன்டோல்ட் ஸ்டோரி’, ’சிச்சோர்’ போன்ற பிளாக்பஸ்டர் திரைப்படங்களில் நடித்த இளம் நடிகரின் எதிர்பாராத இந்த முடிவு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
சாத்தான்குளம் மரணங்கள் : சி.பி.ஐ விசாரணைக்கான அரசாணையை ரத்து செய்ய வேண்டும் – பி.யூ.சி.ல்
அவரது இறப்புக்கு பின்னர் பாலிவுட்டில் நெபோடிசம் (தகுதியில்லாத சொந்த பந்தங்களுக்கு சார்பாக செயல்படுதல்) இருப்பது பற்றிய விவாதங்கள் பெரிதானது. முகேஷ் சாப்ரா இயக்கிய சுஷாந்தின் கடைசி திரைப்படமான ’தில் பெச்சாரா’ டிஸ்னி பிளஸ், ஹாட்ஸ்டார் OTT தளத்தில் வெளியாகவிருக்கின்றன. இந்நிலையில் சுஷாந்தின் சொந்த ஊரான பீகாரில் உள்ள பூர்னியாவில் உள்ள மக்கள், அவர் மீதான தங்கள் அன்பை வித்தியாசமாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
9, 2020
’நான் உருவ கேலிக்கு ஆளாக்கப்பட்டேன்’: பிக் பாஸ் சாக்ஷி உருக்கம்
தற்போது வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. பூர்னியாவில் உள்ள சாலைக்கு சுஷாந்த் சிங் ராஜ்புத் சாலை என மறுபெயரிடப்பட்டுள்ளது. நடிகரின் ஏராளமான ரசிகர்கள் தங்கள் ஹீரோவின் பெயரை சாலையின் பெயர் பலகையில் காண வந்துள்ளனர். மறைந்த சுஷாந்திற்கு அஞ்சலி செலுத்தும் வகையில், ஒரு ரவுண்டானா மற்றும் சாலைக்கு அவரது பெயரிடப்படும் என்று மேயர் சவிதா தேவி ஊடக உரையாடலில் தெரிவித்தார். ஃபோர்டு நிறுவனத்தின் ரவுண்டானாவில் சுஷாந்த் சிங் ராஜ்புத் என்றும், மதுபனியிலிருந்து மாதா செளக் செல்லும் சாலை சுஷாந்த் சிங் ராஜ்புத் சாலை என மறுபெயரிடப்படும் என முன்னர் கூறப்பட்டிருந்தது.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”