அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவான புஷ்பா 2 திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. இப்படம் வசூலில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Pushpa 2 Box Office Collection Day 1: Allu Arjun-starrer overtakes Jawan, Baahubali 2; earns over Rs 282 cr on opening day
அதன்படி, இப்படம் முதல் நாளில் தெலுங்கில் ரூ. 95.1 கோடியும், இந்தியில் ரூ. 67 கோடியும், தமிழில் ரூ. 7 கோடியும், மலையாளத்தில் ரூ. 5 கோடியும், கன்னடத்தில் ரூ. 1 கோடியும் வசூலித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியில் ஜவான் திரைப்படத்தின் முதல் நாள் வசூலை புஷ்பா 2 முறியடித்துள்ளது. குறிப்பாக உலகளவில் புஷ்பா 2, ரூ. 282. 91 கோடி வசூலித்துள்ளதாக வணிக நிபுணர் மனோபாலா விஜயபாலன் குறிப்பிட்டுள்ளார்.
புஷ்பா 2 இந்திய அளவில் சுமார் ரூ. 175 கோடி முதல் நாளில் வசூலித்ததாக கூறப்படுகிறது. இதன் மூலம் பாகுபலி, கேஜிஎஃப் 2, கல்கி 2898 AD ஆகிய திரைப்படங்களின் முதல் நாள் வசூலை பின்னுக்கு தள்ளி புஷ்பா 2 வசூல் வேட்டை நடத்தியுள்ளது.
முதல் நாளில் இப்படத்தின் உலகளவு வசூல் ரூ. 300 கோடி வந்திருந்தால், முதல் வாரத்தில் ஏறத்தாழ ரூ. 1000 கோடியை நெருங்கி இருக்கும் எனக் கருதப்பட்டது. முன்னதாக இந்திய திரைப்படங்களான டங்கல் ரூ. 2500 கோடியும், பாகுபலி 2 ரூ. 1788 கோடியும் அதிகப்படியான வசூல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“